Header Ads



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கும், கண்காட்சியும்


(எம்.வை.அமீர்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நூலகம் விழிப்புணர்வுக் கருத்தங்கு ஒன்றினை 'திறந்த அணுகுகை'  என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கின் நோக்கம் திறந்த அணுகுகை கொள்கை சம்மந்தமாக பிரயோக விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள், ஆய்வாரள்களுக்கு விழிப்பூட்டுவதுடன் தமது ஆய்வுக்கட்டுரைகளை திறந்த அணுகுகை கொள்கையுடைய வெளியீடுகளில் வெளியிடத் தூண்டுவதும், திறந்த அணுகுகை சுவடிகளில் தங்களுடைய ஆய்வுக்கட்டுரைகளை களஞ்சியப்படுத்துவதனை தூண்டுவதுமாகும்.

இதன்மூலம் ஆய்வாளர்களுடைய ஆய்வு முடிவுரை எந்தவிதத் தடைகளுமின்றி ஏனையோர்கள் வாசித்துப் பயன்பெறவும், குறித்த ஆய்வுகளுக்கான வருகை இடம் ஃ மேற்கோள் (ஊவையவழைn) அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. மேலதிகமாக தகவல்தள ஆய்வுகளின்படி பல்கலைக்கழகங்களை தரப்படுத்தும் போது எங்களுடைய பல்கலைக்கழகத்தின் இடத்தினை உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தல் அட்டவணையில் முன்னுக்கு கொண்டு வரலாம் என்பதும் உணர்த்தப்பட்டது. எமது பல்கலைக்கழகத்திற்கு ஓர் இலத்திரனியல் சேமிப்பிடம் (ந – சநிழளவைழசல) ஒன்று அவசியம் என்றும், இதன் உருவாக்கத்திற்கு விஞ்ஞான பீடத்தின் ஒத்துழைப்பு நூலகத்திற்கு அவசியம் என்றும் கலந்துரையாடப்பட்டது.

பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், சிரேஷ்ட, உதவி நூலகர்கள் போன்றோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். வளவாளர்களாக ஜனாப்.எம்.எம்.றிபாயுடீன், நூலகர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்  ஜனாபா.எம்.எம்.மஸ்றூபா சிரேஷ்ட உதவி நூலகர், விஞ்ஞான நூலகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விஞ்ஞான நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிறு நூற்சேர்க்கைகள், அகராதிகள், பொது கலைக்களஞ்சியம், விசேட கலைக்களஞ்சியங்கள் என்ற தலைப்பிலான கண்காட்சியை கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா, பீடாதிபதி, பிரயோக விஞ்ஞான பீடம் திறந்து வைத்தார்.







No comments

Powered by Blogger.