Header Ads



கருமலையூற்று பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் கையளிக்கப்படுமா..? (படங்கள்)


திருமலை கருமலையூற்று பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீளக் குடியேற்றம் பள்ளிவாசல் மீளத்திறத்தல் சம்மந்தமாக கிழக்கு மாகாண சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

கிழக்கு மாகாண சபையின் இரண்டாது அமர்வு செவ்வாய் கிழமை திருகோணமலை உட்துறைமுக வீதி பேரவைச் செயலகத்தில் தவிசாளர் திருமதி ஆரியவத்தி கலப்பத்தி  தலைமையில் நடைபெற்றது.இதன் போது முன்னால் அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தனிநபர் பிரேரனையொன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்

திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசசலையும்இ முஸ்லிம்களுக்குரிய காணிகளையும் வழங்க ஆவணை செய்ய வேண்டுமெனக் கேட்டு கொண்டார்

நீண்டகாலமாக தொழுகை நடாத்திவந்த திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாயலில் தொழுகை நடாத்துவதற்கோ முஸ்லிம் மக்கள் அப்பிரதேசத்தில் நிரந்தரமாக குடியிருப்பதற்கோ இராணுவம் மறுத்து வருகின்றது.

வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளைமனல் கிராம சேவகர் பிரிவின் கீழ் கருமலையூற்று என்ற பழமை வாய்ந்த கிராமம் உள்ளது.

இக்கிராமத்தின் மலை உச்சியில் 1838ம் ஆண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஒரு பள்ளிவாசலும் அமையப்பெற்றிருக்கின்றது.

இப்பிரதேசத்தில் 110க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் நீண்டகாலமாக வசித்து வந்தனர். இவர்களது பிரதான தொழிலாக மீன்பிடி காணப்பட்டதினால் இப்பிரதேசத்தினை அண்டியதாக அவர்களது சீவியம் நடந்து வந்தது.

இவர்களில் அனேகமானோர் சொந்த உறுதிக்காணியை உடையவர்களாகவும்இ சிலர் அரச காணி ஒப்பங்களை கொண்டுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.

1988 ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்த போது இப்பிரதேசத்தில் முகாம் அமைத்து செயற்பட்டதினால் இப்பிரதேசவாசிகளை தொழில் செய்வதில் கட்டுப்பாடுகளுடன் அனுமதித்து அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களை விட்டு வெளியேற்றினர்.

இருந்த போதிலும் அப்பிரதேசத்தை அண்டியதாக அவர்கள் வாழ்ந்து வந்தவர்கள். இந்திய அமைதிகாக்கும் படையினர் இந்த நாட்டை விட்டு வெளியேறிய போது வெளியேற்றப்பட்ட கருமலையூற்று மக்கள் மீண்டும் தமது பிரதேசங்களுக்க சென்று குடியேறினர்.

பின்னர் 1994ல் இலங்கை கடற்படையினர் இப்பிரதேசத்துக்கு வந்து முகாம் அமைத்து பாஸ் நடைமுறையை அறிமுகம் செய்து பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் தொழில் செய்ய அனுமதித்தனர்.

தங்களது பிரதேசத்தினையும் பள்ளிவாயலையும் மீட்டுக்கொள்வதற்காக அப்பிரதேச வாசிகள் செய்த மக்கள் போராட்டத்தின் காரணமாக 2011ல் அப்பிரதேசம் முழுவதையும் கடற்படையினர் மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி மொழி வழங்கப்பட்டது.

இவ்வாறான சூழ் நிலையில் கடற்படையினர் அப்பிரதேசத்தினை விட்டு வெளியேறிய போது இராணுவம் வந்து முகாம் அமைத்து தொடர்ந்து கெடுபிடிகளை செய்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

நீண்டகாலமாக தொழுகை நடாத்தி வந்த அப்பிரசேத்து முஸ்லிம்கள் அப்பள்ளிவாயலுக்கு சென்று ஐந்துவேளை தொழுகை நடாத்துவதற்கோ அப்பிரதேசத்தில் நிரந்தரமாக குடியிருப்பதற்கோ இராணுவம் மறுத்து வருகின்றது.

இப்பள்ளிவாயல் முன்னாள் கூட்டுறவு அமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் அவர்களினால் 2007ல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டதனையும் இந்த சபைக்கு சாட்சியமாக முன்வைக்கின்றேன்.

காணி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலையிட்டு இப்பிரதேச மக்களின் பள்ளிவாயலையும்இ குடியிருப்பு காணிகளையும் மீட்டுக்கொடுக்க ஆவணை செய்யுமாறு இவ் உயர் சபையில் இப்பிரேரணையை சமர்ப்பித்து மும்மொழிகின்றேன் என;று கூறினார்

இப்பிரேரனையை ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவழித்துப் பேசினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி உரையாற்றும் பொழுது பாரம்பரிய முஸ்லிம்களின் காணிகள் பறிபோவதை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. இச்சபையில் கொண்டு வரப்படும் நல்ல விடயங்களுக்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம் எதிர்க் கட்சிகள் நாம் எதிரிக்கட்சிகளல்ல இன்றும் சம்பூர் தமிழ் மக்கள் அகதிகளாகவுள்ளனர்

வாழ்விடங்களின்றித் தவிக்கின்றார்கள் இம்மக்களின் மீளக்குடியேற்றம் பற்றி இச்சபை கவனம் எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக

இங்கு சபையில் விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றினார். ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே சூடான விவாதம் போனது

மு;.கா.உறுப்பினர்கள் தேசிய காங்;கிரஸ் உறுப்பினர்கள் பள்ளி உடைப்பு பள்ளி ஆக்கிரமிப்பில் தங்களது; கட்சித் தலைவர்களின் நியாயத்தன்மையைப் பற்றி விவாதித்தனர். முதலமைச்சர.....; இவ்வாறான உயர் சபையில் உட்கட்சி மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் அவ்வாறான விவாதங்களை அரசியல் மேடைகளில் வைத்துக் கொள்ளுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களைப்பார்த்துக் கூறினார்.



No comments

Powered by Blogger.