ஒரு ஈமானிய இருதயத்தின் அழைப்பு..!
(By faji)
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
நாம் மூடிய அறைக்குள் இருந்து மோதுகின்றோம்
காலத்தின் ஜன்னலை திறந்து பார்
கசப்பான நிகழ்ச்சிகளால் இருதயம் வலிக்கிறது
நமது சகோதரத்துவத்தில் கருத்துமுரண்பாட்டு முட்கள்
பெரும் பற்றைகளாக வேலியிடுகின்றபோது
நமது உயிரிலும் மேலானவரின் இருதயம் வலிக்கும்
என்பதை நினைவு படுத்திக்கொள்
நான் உன்னை வெல்லவுமில்லை நீ என்னை வெல்லவுமில்லை
இது காலத்தில் கிடைத்தஅனுபவம் நிருபித்துகாட்டியது
வெற்றியெல்லாம் இப்லீசுக்குதான்
சமூகம் சார்ந்தகடமை நம்மீது அதிகமிருக்கிறது ஆதலால்
தர்கவாதத்தை நிறுத்துவோமென அழைக்கிறேன்
நாமொருவரையொருவர் வென்று கொள்வதற்காக
ஆதார நூல்களை புரட்டிப்புரட்டி
அதன் பக்கங்கள் நொறுங்கியது போல நம் சகோதரத்துவம்
நொறுங்கி கிடக்கிறது
நமது கயிறு இழுபோட்டியில் சமூகம் நசுங்கிப்போகிறது
நமது பிரிவில் எதிரிகள் வேறூன்ற நினைக்கின்றார்கள்
இதை ஏன் ஏற்கமறுக்கின்றோம்
சலாம் சொல்வதிலும் சாதிபபாற்கின்ற அவலநிலை
இஸ்லாம் எளிமையானதகவும் இனிமையானதாகவும் இருக்கையில்
நாம் ஏன் வன்மையாகவும், கசப்பாகவும் திணிக்கின்றோம்
உனது வணக்கம் உன்னையும்,எனது வணக்கம் என்னையும்
அந்நாளில் அச்சமின்றி,இறைவனை காணச்செய்யுமென்றால்
நமக்குள் எதற்கு முரண்பாடு
நமதுகருத்துக்கள் தீர்ப்புக்களாக திணிக்கப்படுவது அர்த்தமற்றது
உன்னையும் என்னையும் பின்பற்றியவர் இறந்து மீண்டெழுந்து
சரிபிழை பற்றி சாட்சியம் கூறவில்லை
நீயும் நானும் "நீண்ட சொதிவைத்து அடுத்தவீட்டுக்கு கொடுங்கள்"
என்ற தத்துவத்தின் ஆழத்தை அறியவில்லை
அது எதிரியையும் நண்பனாக்கும் என்பதை அறியவில்லை
நம்மால் சுற்றியுள்ளவன் நன்மை பெற்றான,துயர்கொண்டான என
நம்மை நாம் கேட்கவில்லை
நமது பார்வைகள் புன்னகையும்,அன்பும்,கருணையும் கொண்டு
நோக்கவும் இல்லை
அடுத்தவன் என்னமதம் என்பதைவிட நமது மதத்தின் அழகினை
அறியச்செய்யவில்லை
ஒன்றுபடுவோம் விட்டுகொடுப்புடன் பேசுவோம் சிந்திப்போம்
இஸ்லாமிய பசுமைக்காய் முடிந்த வரை நீருற்றுவோம்
Post a Comment