இலங்கையில் திமிங்கிலம் டொல்பீன்களை பார்வையிட புதிய சட்டம்
இலங்கை கடற்பரப்பிலுள்ள திமிங்கிலம் மற்றும் டொல்பின்களைபார்வையிடுவதற்கு புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கற்பிட்டி, திருகோணமலை மற்றும் மிரிஸ்ஸ ஆகிய கடற்பரப்புகளில் திமிங்கலம்மற்றும் டொல்பின்களை பார்வையிடுவதற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகைத் தருவதாக வனவிலங்கு திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.பி.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
திமிங்கிலம், டொல்பின்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை சுற்றுலா பயணிகள் பயணிக்கும் படகுகள் சிறந்த தரத்தில் இருக்க வேண்டியதுடன் அதனை உறுதிப்படுத்துவதற்கான சானறிதழை பெற்றுக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம் என அவர் குறிப்பிட்டார்.அத்துடன் படகுகளில் பாதுகாப்பு அங்கிகள் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் திமிங்கிலம் மற்றும் டொல்பின்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில் அவற்றை பார்வையிட வேண்டும் என வனவிலங்குபணிப்பாளர் நாயகம் எச்.பி.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
100 மீற்றர் தொலைவில் படகை நிறுத்தி திமிங்கிலங்களை பார்வையிட முடியும்என்பதுடன் 50 மீற்றர் தொலைவில் படகை நிறுத்தி டொல்பின்களை பார்வையிடமுடியும் எனவும் அவர் கூறினார்.
இவ்வாறு பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கிஉயிரினங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட கூடாது என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனை கண்காணிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகளுடனான அலுவலகம் ஒன்றை அந்த இடங்களில் ஸ்தபிக்கவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதே வேளை சுற்றுலா பயணிகளுக்காக அனுமதிச்சீட்டை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் படி திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை பார்வையிடுவதற்கு வெளிநாட்டுசுற்றுலா பயணி ஒருவருக்கு கட்டணமாக 8 டொலர்களும் உள்நாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு 20 ரூபாவும் அறவிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். nf
Post a Comment