Header Ads



நிந்தவூரில் மையவாடி அபிவிருத்தி - அமைச்சர் அதாவுலலாஹ் நிதி ஒதுக்கீடு

(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் முயற்சியன்   கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ALM அதாஉல்லாஹ் அவர்களின் நிதி ஓதிக்கீட்டின் கீழ் நிந்தவூர் 03 ம் பிரிவு முத்தகீன் ரவாஹா மையவாடிக்கான சுற்று மதில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று  (05 .11 .2012 , திங்கட்கிழமை) நிந்தவூர் கடற்கரை வீதியில்  அமைந்துள்ள முத்தகீன் ரவாஹா மையவாடியில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் MAM தாஹிர், பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமாலெப்பை ஆகியோர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர். 

மேற்படி நிகழ்வில் தேசிய காங்கிரஸின் நிந்தவூர் மத்திய குழு உறுப்பினர்களும், பொது மக்களும்  கலந்து சிறப்பித்தனர்.





No comments

Powered by Blogger.