முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினாராகவே செயற்படுவேன் - ரிஸ்வி ஜவஹர்ஷா
நேற்று செவ்வாய்க்கிழமை (06.11.2012) வடமேல் மாகாண சபைக் கூட்டம் நடைபெற்ற போது விஷேட உரையொன்றை ஆற்றிய புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எஹியா பின்னர் ஆளுங்கட்சியில் அமர்ந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும் சில ஊடகங்களும் இணையதளங்களும் இதனை திரிபு படுத்தி மகாண சபை உறுப்பினர் எஹியாவும் நானும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டதாகவும் உறுப்பினர்களை இழந்துவிட்டதாகவும் செய்திகளை வெளியிட்டன.
நேற்று (06.11.2012) குருநாகலையில் நடைபெற்ற வடமேல் மாகாண சபை அமர்வுகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக கலந்துகொள்ளாத நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாகவோ ஆளுங் கட்சியுடன் இணைவதாகவோ எந்த கருத்ததையும் எங்குமே தெரிவிக்காத நிலையில் இவ்வாறான செய்தியினால் எனது அரசியல் களங்கப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். இவ்வளவு காலமும் சமூகத்திற்காக குரல் கொடுத்துக்கொண்டு குருநாகல் மாவாட்டத்தில் நன்மதிப்பைப்பெற்ற அரசியல் வாதியாக செயற்பட்டு வந்தேன் இக்குறித்த செய்தியினால் எனது நன்மதிப்பிற்கும் எனது தனிப்பட்ட அரசியலுக்கும் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்னும் என்பது நிச்சயம்
நான் நேற்றய மாகாண சபை அமர்வுகளில் கலந்துக் கொள்ளாத காரணத்தினால் மாகாண சபை உறுப்பினர் எஹியா இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டார் என்பது பற்றியோ அவரது நிலைப்பாடு பற்றியோ தெளிவாக தெரியாத காரணத்தினால் அவரது நிலைப்பாடு தொடர்பாக நான் எந்த கருத்தையும் வெளியிட விரும்பவில்லை.
ஆனால் நான் கடந்த காலங்களைப் போன்று தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவே செயற்படுவேன் என்றும் கட்சி நலனிலும் சமூக நலனிலும் கடந்த காலங்களைப் போன்று எதிர் காலத்திலும் இன்ஷா அல்லாஹ் துடிப்புடன் செயற்படுவேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
வடமேல் மாகாணசபை உறுப்பினர்
சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா
Post a Comment