எமது விளக்கம்..!
அதனை எமது இணையம் ''புத்தளமும் மரைக்கார்களும்..!'' என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்திருந்தது.
குறித்த கட்டுரை குறித்து சில மாற்றுக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. அந்த கருத்துக்களையும் நாம் அனுமதித்தோம்.
சகோதரர் (S.M.Isham) புத்தளத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர். அவர் இன்னும் சில முஸ்லிம் இணையங்களுக்கும் எழுதி வருகிறார். இதையெல்லாம் கவனத்திற்கொண்டே நாம் அந்த சிறு கட்டுரைக்கு அனுமதியளித்தோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
இந்நிலையில் எமது இணையம் எந்தவொரு தனிநபரையும் இலக்காக கொண்டு அல்லது குறித்த பிரதேசத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்குடனோ எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபட்டதில்லை. அதில் எமக்கு உடன்பாடும் இல்லை.
எமது இணையத்திற்காக புத்தளத்தைச் சேர்ந்த அபூ நாதில் என்ற செய்தியாளரும், இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் என்ற செய்தியாளரும் முழுமையான பங்களிப்பு செய்து வருகிறார்கள். புத்தளம் பற்றிய விடயங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்படுகையில் அவற்றை நாம் பிரசுரித்து வருகிறோம்.
அதேவேளை இங்கு மற்றுமொரு முக்கிய விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது எமது இணையத்திற்கு கட்டுரைகள் எழுதி அனுப்புவர்களே அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர்கள். அந்த கருத்துக்கள் எமது இணையத்தன் கருத்துக்கள் அல்ல. எமது இணையத்தின் மேல் பகுதியிலுள்ள தொடர்புகள் மற்றும் இணையத்தில் கீழேயுள்ள பகுதியலும் இதனை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
இருந்தபோதும் சகோதரர் எழுதிய சிறு கட்டுரை மூலம் எவருடைய மனதேனும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம்.
அதேவேளை எமது எல்லாவிதமான நோக்கங்களையும் அறிந்தவனாக அல்லாஹ் இருக்கிறான். அவன் சூழ்ச்சிக்காரர்களில் எல்லாவித சூச்சிகளையும் அறிந்தவனாக இருக்கிறான். நாவினால் ஒரு முஸ்லிமை புண்படுத்துவது எவ்வளவு கொடிய விடயமோ அதேபோன்று எழுத்துகள் மூலமும் ஒரு மனிதனை புண்படுத்துவதும் அமைகிறது.
யா அல்லாஹ் நீயே எல்லாவற்றுக்கும் மேலானவன்...!
what happend? anything wrong? did you removed my article ?
ReplyDeleteஎழுதினார் என்பதற்காக பிரசுரிக்காமல் ஆராய்ந்து மற்றவர்களின் மனம் புண்படும் ஆக்கங்களை தவிர்ப்பது சாலச்சிறந்தது என்பது எனது கருத்தாகும்
ReplyDeleteathu yaarudaiya manathaiyum punpaduththa villai nanbare
ReplyDelete