யாழ்ப்பாணத்திலும் மஹிந்த பிறந்ததின நிகழ்வு - பிரதிமேயர் ரமீஸ் மரம் நாட்டினார்
யாழ்ப்பாணத்தில் “தேசத்துக்கு நிழல்” (தெயட்ட செவன) தேசிய மரநடுகை வேலைத்திட்டம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தையும், ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவுகூறுமுகமாக தேசத்தின் நிழல் மரநடுகை வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, பிரதியேமயர் ரமீஸ் ஆகியோர் நிழல்தரும் மரக்கன்றுகளை நாட்டினர். கால்நடைகளில் இருந்து பாதுகாக்கும் முகமாக நாட்டப்பட்ட ஒவ்வொரு மரக்கன்றுகளைச் சுற்றி பாதுகாப்புக்காக கம்பி வலை கூடுகள் அமைக்கப்பட்டது.
Post a Comment