அட்டாளைச்சேனையில் நடமாடும் சேவை (படங்கள் இணைப்பு)
(எஸ்.எல்.மன்சூர்)
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி இம்முறை கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகம் நாடாத்திய நடமாடும் சேவை இன்று (2012.11.03) அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட அரச யாக்கங்களின் பிரதிநிதிகள் வருகை தந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். சில பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படாமல் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து திரும்பிக் கொண்டிருத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பீ. தயாரட்ன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவார்கள் என்கிற நம்பிக்கையில் வந்திருந்தார்கள். இருப்பினும் மொத்தப்பிரச்சினைகள் முழுவதையும் ஒருநாளில் தீர்வினை வழங்க முடியாது. பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மக்கள் முண்டியடித்துக் கொண்டு தங்களது தீர்வுக்கு விடைகாண முற்பட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Post a Comment