Header Ads



யாழ் முஸ்லிம் இணைய செய்திக்கு பலன் - வீதிகளை புனரமைக்க நிதி (படங்கள்)

(எம்.எம்.ஏ.ஸமட்)

www.jaffnamuslim.com இணையத்தள செய்தியையடுத்து கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடிப் பிரதேசத்தின் சேதமடைந்த உள்ளுரர் வீதிகளை புனரமைக்க கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தனது அமைச்சினூடாக 4 கோடியே 60 இலட்சம் ரூபா நிதியினை வழங்கியுள்ளார்.

தேசதமடைந்த கல்முனைக்குடியின் வீதிகளை புனரைமப்பு செய்வது தொடர்பாக 'கிழக்கு மாகாண சபை அமைச்சர் உதுமாலெவ்வையின் கவனத்துக்கு' என்ற தலைப்பில் கடந்த வாரம் www.jaffnmuslim.com இணையத்தளத்தில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

இச்செய்தியையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பு செய்வது தொடர்பாக அமைச்சர் உதுமாலெவ்வையிடம் விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக அமைச்சர் உதுமாலெவ்வை தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 4 கோடியே 60 இலட்சம் ரூபாவை கல்முனைக்குடியில் சேதமடைந்துள்ள உள்ளுர் வீதிகளை  புனரமைப்பதற்காக வழங்கியுள்ளார்.

கல்முனைக்குடியின் சேதமைந்த வீதிகளைப் புனரமைப்பு செய்வது தொடர்பான கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனைக்குடி அல்பஹ்ரியா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தலைமையில் நடைபெற்றது.

கல்முனைக்குடியின் அபிவிருத்தி வரலாற்றில் இப்பெரும்தொகை நிதி வீதிப் புனரமைப்புக்காக வழங்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையெனவும் இந்நிதியினை வழங்கிய அமைச்சர் உதுமாலெவ்வைக்கும் உடனடியாகச் செயற்பட்டு இந்நிதியினைப் பெற்றுக்கொடுத்த மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனுக்கும் தேசமடைந்த வீதிகள் தொடர்பில் செய்தி வெளியிட்ட  www.jaffnamuslim.com இணையத்தளத்திற்கும் கல்முனைக்குடிப் பிரதேச மக்கள் தங்களது நன்றியினைக் இக்கூட்டத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 






1 comment:

  1. உதவிக்கு மட்டுமே மாற்று அரசியல் வாதிகள் தேவை. வாக்களிப்பு மரத்திற்கு மாத்திரமே நல்ல நன்றி உள்ள உணர்வு

    ReplyDelete

Powered by Blogger.