ஹமாஸ் பேராளிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் - துருக்கி பிரதமர் காசா செல்லபோகிறார்
பலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதிக்கு விரைவில் விஜயம் செய்யவுள்ளதாக துருக்கி பிரதமர் ரிசப் தய்யிம் எர்டோகன் அறிவித்துள்ளார். தனது விஜயத்தின்போது பலஸ்தீன நிர்வாகத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸையும் காசாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2011 செப்டெம்பரிலும் எர்டொகன் காசாவுக்கு விஜயம் மேற்கொள்ள முயற்சித்தார். எனினும் அப்போது எகிப்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த இராணுவ கவுன்ஸில் எர்டொகன் எகிப்து எல்லை ஊடாக காசாவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியின் பிரதமர் இஸ்ரேலால் முடக்கப்பட்டிருக்கும் காசாவுக்கு விஜயம் மேற்கொண்டால் அது பெரிய இராஜதந்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
கட்டார் நாட்டு தலைவர் கடந்த மாத ஆரம்பத்தில் காசாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைத்தார்.
Post a Comment