பிறப்பு, விவாகம், மரணப் பத்திரங்களை உடன் பெற்றுக்கொள்ளும் திட்டம்
(இக்பால் அலி)
எதிர்வரும் புதிய வருடத்திலிருந்து நாட்டில் எந்த இடத்திலிருந்தும் பிறப்புப் பத்திரம், திருமணம் மற்றும் மரணப் பதிவுப் பத்திரப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை மேற்கொள்ள அரச நிர்வாக மற்றும் சுதேச விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது நாடு பூராவும் அமைந்துள்ள 250 பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும் சொற்ப நேரத்தில் இந்த பதிவுப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள ஒழுங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்துப் பிரதிகளும் தற்போது கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன. கணினி மூலமான பிரதிகள் வழங்கப்படும்.
அமைச்சர் டப்லியூ, டி. ஜே. செனவிரத்னவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்த பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.
Post a Comment