Header Ads



காத்தான்குடியில் மீன்பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார்


(M.S.M.பாயிஸ்) 

காத்தான்குடி பாலமுனை கடற்பரப்பில் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்ற சகோதரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று மட்டக்களப்பு பிரதேசம் முழுவதும் கடுமையான மழை காரணமாக கடல் அசாதாரண நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் பாலமுனையை சேர்ந்த சகோதரர் ஒருவர் நேற்றிரவு தனிமையில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர் இதுவரை கரை திரும்பாததன் காரணமாக அவரை தேடும் பணியில் சக மீனவ சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அவர் திசை மாறி வேறு பிரதேசத்துக்கு சென்றிருக்கலாம் என மீனவர் ஒருவர் அச்சம் தெரிவித்தார். 

மாரி காலம் ஆரம்பமாகியுள்ளதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனது குடும்பத்தை காப்பாற்ற ஹலானான முறையில் மீன் பிடிக்கச் சென்ற அந்த ஏழைச் சகோதரர் மீண்டும் பாதுகாப்பாக கரை திரும்ப அனைவரும் பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.