சுகாதார துறையில' நாடு பாரிய மாற்றங்களை காணவுள்ளது - சுனில் கே. அமரதுங்க
(இக்பால் அலி)
இம்முறை ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பஜட்டில் சுகாதார சேவையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நாடு சுகதாரத் துறையில் பாரிய அபிவிருத்தினைக் காணவுள்ளது. என்று மத்திய மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சுனில் கே. அமரதுங்க தெரிவித்தார்.
அக்குரணை பங்கொள்ளாமட சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்று கோடி ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட ஆங்க சம்பூர்வமான தாய் சேய் மருத்துவ நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் கே. அமரதுங்க இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.அவர் பேசுகையில்,
தாய்மார்களின் போசாக்கினை மேம் படுத்த மத்திய மாகாண சுகாhர சேவை பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. தற்போதுள்ள பிள்ளைகளின் நலன்ககுதியும் எதிர் காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளின் நலன் கருதி இந்தச் தாய் சேய் மருத்துவம் நிலையம் அமையப்பெறவுள்ளது. இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள தாய் சேய் நிலையம் தற்போதுள்ள கால நிலை மாற்றத்தின் காரணமாக மண்சரிவுக்குள்ளாக் கூடிய இடத்தில் அமைந்துள்ளதால் அது பொருத்தமற்றதாய் மதிப்பீடு செய்யபப்பட்டுள்ளது. இந்தச் தாய் சேய் மருத்துவ நிலையம் இதில் கடமைபுரியும் அதிகாரிகள் தங்கயிருந்து சேவை செய்யும் அளவுக்கு சகல வசதிகளையும் கொண்ட அங்கசம்பூர்வமான வைத்திய நிலையமாக அமையப்போகுறிது என அவர் மேலும் தெரிவித்தர்.
மத்திய மாகாண சபை உறுப்பனர் ரிஸ்வி பாரூக்
இந்தப் பிரதேசம். கூடுதலாக ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்த மக்கள் வாழும் பகுதியாகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அக்குரணைக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினரைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வாறாயினும் இந்தப் பிரதேசத்திற்குச் செல்லும் பாதைகளுக்கு கொங்கீரிட் காபட் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில் மேலும் நல்ல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கு தங்கள் பகுதிகளில் அரச பிரதிநிநிதிகளை உருவாக்கிக் கொள்ள முயற்சி; செய்யுங்கள். அரசப் பிரதிநதிகளை இழப்பதன் மூலம் தம் பகுதிக்குத் தேவையான வளங்களையும் வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு பெற்றுத் தரம் அரசில் பிரதிநிதிகளை அரசியல் காங்களில் மறத்தல் கூடாது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் மேலும் அங்கு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அக்குரணை பிரதேச செயலாளர் ஓ. எம். ஜாபீர், மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஊர் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment