இஸ்ரேலின் அக்கிரமம் - காஸாவில் மூன்று தலைமுறையினரே வபாத்தாகினர்
(tn)
இஸ்ரேல் வான் தாக்குதலில் காசா பகுதியில் ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவிலுள்ள ஜபலியா அகதிகள் முகாம் மீது நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இந்த அவல சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடையுரிமையாளரான ஜமால் தலுவின் இரண்டு மாடி வீட்டின் மீதே இஸ்ரேல் யுத்த விமானம் குண்டு வீசியுள்ளது. இதனால் அந்த கட்டிடம் முற்றாக தரைமட்டமாகியுள்ளது.
அவசர மீட்பு பணியாளர்கள் ஒரு மணி நேரம் புல்டோசர்கள் கொண்டு சேதங்களை அகற்றிப்பார்த்தபோது ஜமால் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தாக்குதல் இடம் பெற்ற போது ஜமால் தலு வீட்டில் இருக்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலினால் ஜமாலின் சகோதரி, மனைவி, இரு மகள்கள், மருமகள், 2, 6 வயதான இரு பேரக் குழந்தைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
இது தவிர, இந்த தாக்குதலில் மூன்று அயல் வீட்டாரும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 80 வயது பெண் ஒருவரும் பலியாகியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2009 ஆம் ஆண்டு இஸ்ரேல் காசா மீது நடத்திய ஷெல் தாக்குதலில் சமவ்னி என்பவரின் குடும்பத் தைச் சேர்ந்த 29 பேர் கொல்லப்பட்டனர்.
Post a Comment