Header Ads



சிறுவர்கள் மீது பாதிரியார்கள் பாலியல் துஷ்பிரயோகம் - தேசிய விசாரணைக்கு உத்தரவு


(தூது)

பாதிரியார்கள் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததுக்குறித்து தேசிய அளவில் விசாரணை நடத்த ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஜூலியா கில்லார்ட் உத்தரவிட்டுள்ளார். கிறிஸ்தவ பாதிரியார்களின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக நியூ சவுத் வேல்ஸில் ஹண்டர் வாலி கத்தோலிக்க சபை உண்மைகளை மூடி மறைப்பதாகவும், ஆதாரங்களை அழித்துள்ளதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பீட்டர் ஃபோக்ஸ் கூறியது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கிறிஸ்தவ சபைகள் உள்ளிட்ட அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் விசாரிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

1930-ஆம் ஆண்டிற்கு பிறகு 620 சிறுவர்களை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கடந்த செப்டம்பரில் விக்டோரியாவில் உள்ள கத்தோலிக்க சபை கூறியது. ஒரு சபையை மட்டும் குறிவைத்து விசாரணை நடைபெறவில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். விசாரணையுடன் ஒத்துழைப்பதாகவும், பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க முயலுவதாகவும் சிட்னியில் உள்ள ஆர்ச் பிஷப் கர்டினால் ஜார்ஜ் பெல் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.