Header Ads



''எயிட்ஸிலிருந்து சமூகம் விடுபடுகின்ற நிலை தோற்றம் பெறுவது காலத்தின் கட்டாயமாகும்''


(உலக எயிட்ஸ் தினம் 01.12.2012 ஆகும் அதனை முன்னிட்டு இக்கட்டுரை)

(எஸ்.எல். மன்சூர்(B.Ed)
ஆசிரிய ஆலோசகர், அட்டாளைச்சேனை)


'கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல – ஆண்களுக்கும்தான்' என்று அன்று பாரதி எனும் கவிஞன் கூறியுள்ளான். ஆதலால்தான் என்னவோ அன்றைய அறிஞர்கள் 'வாழ்க்கையானது ஒரு மலரைப்போன்றது. அதில் தேன் போன்றது காதல்' என்பதாக ஒரு அறிஞரும் கூறுகின்றார். காதல் இயற்கையாக தோன்றுவது, அதில் மனித இனம் மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களிலும் இக்காதல் வயப்பாடு இனப்பெருக்கத்திற்கு வழிவகுத்திட உதவி நிற்கின்ற சங்கதியை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் முறைகேடான காதலும், புதியதாக அனுபவிக்கத் துடிக்கும் மனித விழுமியங்களும், முறைகேடான பழக்கவழக்கங்களும் மனிதனை அசிங்கமானவனாக துரத்திச்செல்கின்ற ஒரு செயற்பாடுதான் பால்வினை நோய்களாக வந்தடைகின்றன. 

முன்னோர் கூறிய கூற்று இதற்குப் பொருத்தமாக இருக்கலாம். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற மந்திரம் பலதரப்பட்ட உண்மைகளை  உரைத்து நிற்கின்றன. இதனை நினைவுறுத்தியதாக ஷேக்ஸ்பியர் 'காதல் என்பது குருடு. காதலர்கள் செய்யும் அழகிய தவறுகளை அவர்களாலேயே பார்க்க முடியாது' என்பதாகக்கூறுகின்றார். இளமையின் தவறுகள் அழகாகத்தான் தெரியும் இறுதியில் தவிக்க நேரிடும் என்பதை இன்றைய பால்நிலை நோய்களில் குறிப்பாக எயிடஸ்; நோய் வருகையின் எதிர்ப்பினை குறிப்பாக இளஞர்களின் வழிதவறுகளிலிருந்து தன்னையும், சமூகத்தையும் காக்க வேண்டிய கடப்பாடுகளுடன் வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.  

பொதுவாக ஆண் பெண்களுக்கிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாடாக 'பால்நிலை' காணப்படுகின்றது. உயிரியல் ரீதியான வேறுபாடுகளில் அவை உடலுறுப்பு, உடற்றொழிப்பாடுகள், ஓமோன் சுரப்புக்கள் என்பனவாகவும்; காணப்படுகினறன. அத்துடன் சமூகம் ஆண்கள் பெண்கள் ஆகியோருக்கு வழங்குகின்ற ஒரு சமுதாய அந்தஸ்து பால்நிலையாகும். இது உயிரியல் உருவாக்கம் அல்ல. ஆனால் சமூதாயத்தினால் உருவாக்கப்பட்ட விழுமியங்கள், பாத்திரங்கள், குணாதிசயங்கள், மனப்பாங்குகள் ஆகியவற்றைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் சமூகமானது பால் வேறுபாட்டை பால்நிலை வேறுபடாகவே வளர்க்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் முகமாக இன்றைய பாடசாலைகள் பிள்ளை நேயப் பாடசாலைகள் எனும் திட்டத்தின்ஊடாக ஆண் - பெண் சமூகவியல்புகளில் கவனம் செலுத்தப்பட்டு சமமான ஆளுமை கொண்டவர்கள் என்கிற பேதமற்ற நிலையைத் தோற்றம் பெறச் செய்வதற்கான ஆரம்பமாக இத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை நாளை உலகினை நலமுடன் எதிர்கொள்ளக்கூடியவர்களை கல்வியின் ஊடாக உருவாக்கம் பெறச் செய்;வதேயாகும்.

எயிட்ஸ் நோய் இன்று அனைவரையும் ஆட்டிப்படைக்கும்  ஒரு சமூக நோயாக உலாவருகின்றது. மனித உடலின் செல்லில் ஒரு இடைவெளி காணப்படுகின்றது. இந்த இடைவெளிக்குள் எச்.ஐ.வி கிருமி உள்ளே நுழைந்து அங்கு பல்கிப்பெருகி அந்த செல்லை அழிக்கச்செய்து மற்றொரு செல்லுக்குத் தாவி அங்கும் அழித்துவிடுகின்றது. இவ்வாறு பல செல்கள் அழிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகின்றபோது உடலினுள் தொற்று நோய்கள் ஒட்டிக் கொள்கின்றன. 

பொதுவாக பெண்கள்தான் மிகவும் கவனத்துடன் வாழவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் இன்றைய உலகின் மக்கள் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். ஒருநாளில் 70வீதமான நேரம் பெண்கள் வேலை செய்கின்றவர்களாகவும், உணவுத் தேவையில் சுமார் 50வீதமானவற்றை பெண்கள்தான் உற்பத்தித் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். இவர்களது கல்வியறிவு 75வீதத்திலும் வருமானத்தில் பத்துவீதத்தையும் ஈடுகின்ற ஒருநிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான பெண் சமுதாயத்தில் ஒரு போதைப் பொருள்போன்று பார்க்கப்படுகி;ன்ற இழிநிலை காரணமாக அதனை மிகவும் பக்குவமின்றி பயன்படுத்துகின்ற பெண்கள் மிகப்பெரிய பால்வினை நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு நோய்க்காவிகளாக உலாவருகின்றனர். சமுதாயத்தின் கண்கள் பெண்கள். இவர்களைப் பாதிக்க வைக்கின்ற பாரிய பங்களிப்பு ஆண்களிடமே உள்ளது. ஆதலால்தான் மூதுரையில்; 'கற்புடையப் பெண்டிர் பிறர் மனம் புகார்' எனக்கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டில்கூட அண்மையக் காலங்களின் அறிக்கைளின்படி சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்கள் உலாவருகின்றனர். என்கிற விடயங்களும் பாலியல் தொழில் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. இந்தளவு இவர்களது உருவாக்கத்திற்குப் பின்னால் நிச்சயமாக ஆண்களும் இருக்கிறார்கள் என்பது மறைமுகமான உண்மை என்றே கூறலாம். வழிகெட்டு, சீரற்றநிலைக்கு பெண்கள் செல்வதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தச் சின்னஞ்சிறிய நாட்டில் இந்தத்தொகை எதிர்கால சமுதாயத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகவே அமையும் என்பதில் சமூதாய ஆர்வலர்கள் கவனம் செலுத்துதல் கட்டாயமாகும். கற்பை இழக்கத் துணிந்தவள் எதனையும் இழக்கத்துணிவாள் என்கிற ஒரு கருத்தும் உண்டு.

உலகினை ஆட்டிப்படைக்கும் எயிட்ஸ் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் எச்ஐ.வி; கிருமி எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளை கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கின்றன. என்று சிக்மா எனும் எயிட்ஸ் ஆய்வுக்குழுவின் அறிக்கைகள் கூறுகின்றன. சாதாரண ஆண்பெண் உடலுறவைவிட பலமடங்கு அதிகம் ஓரினச் சேர்க்கையினால் ஏற்படுகின்றது என்பதை கடந்த 10ஆண்டுகளில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மாத்திரம் மொத்த எயிட்ஸ் நோயார்களில் 48வீதம் ஓரினச்சேர்க்கை பழக்கதினால் ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மையாகும். அதேவேளை இவ்வாறான பால்வினை நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35வயதிற்கும் குறைவானவர்கள் 53வீதமானோர் காண்படுகின்றனர் உண்மைகளும் இன்று வெளியாகியுள்ளன. 

இன்று எச்.ஐ.வி பற்றிய அறிவு அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் போதியளவான விழிப்புணர்வுகள் கிராமங்களிலும், நாகரீக  மோகத்தினால் அலைந்து திரிகின்றவர்களிலும் வந்தடையவில்லை என்பதையே இவைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமதுநாட்டில் 2005ஆம் ஆண்டின் அறிக்கை ஒன்றின்படி சுமார் 743 ர்ஐஏ காவிகள் காணப்பட்டனர் எனவும், அதன் காரணமாக 140 பேர் இறந்துள்ளனர் எனவும் 15வயதிற்கு மேற்பட்டோருக்கும் இவை ஏற்படுகின்றன எனவும் கூறப்படுகின்றது. கடந்த 1987ஆம் ஆண்டிலிருந்து இந்த ர்ஐஏ பற்றிய தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றுவரை கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. இதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு நிலைமை காணப்பட்டாலும் போதியளவான கற்றலுடான ஒரு நிரந்தரமான விழிப்புணர்வுகள் தொடராக ஊட்டப்படுகின்றபோது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படலாம் என்பது பலரின் கருத்தாகும். 

அதேவேளை பெண்கள் மட்டுமன்றி பல்வேறு பாலியல் நோய்களுக்கும் ஆண்களும் உள்ளாக்கப்படுகின்றனர் அத்துடன், முறைகேடான இச்சைகளினாலும் ஏற்படுகின்றன என்பதை ஆண்களும் உணர்ந்;திருத்தல் அவசியமாகும். ர்ரஅயn ஐஅஅரழ ஏசைரள  எனப்படுகின்ற இவ்வைரஸ் எற்டுத்துகின்ற யுஉஙரசைநன ஐஅஅரநெ னுநகiஉநைnஉல ளுலனெசழஅந என்கிற மாற்றம் காணமுடியாத நோய்க்கு இட்டுச்செல்ல இது உதவுகின்றது. அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை இல்லாதொழித்து நோயின் தாக்கத்தை அதிகரிக்கவைத்து இறுதியில் மரணத்திற்கு இட்டுச் செல்கின்ற நிலைக்கு இதன் தாக்கம் பயங்கரமானதாக காணப்படும். பொதுகவாகவே ஆண் பெண் சேர்வதால் 85வீதமும், ஆணும் ஆணும் சேர்வதால் (ஓரினச் சேர்க்கை) 11வீதமும், தாய் மூலமாக பிள்ளைக்கு (பாலூட்டுவதுபோன்ற) 3வீதமும், இரத்த ஏற்றத்தின் மூலமாக 1வீதமும் பரவுகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான ர்ஐஏஃயுஐனுளு சுகாதாரத்துறைக்கு பாரியதோர் அறை கூவலாகவே காணப்படுகின்றது. இக்கொள்ளை நோய் ஆரம்பித்த காலத்திலிருந்து கடந்த2000ஆம் ஆண்டுவரை சுமார் 22மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். 2000ஆம் ஆண்டில் மாத்திரம் 3மில்லியன் மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மேலும் 5மில்லியனுக்கும் மேற்பட்டோர் புதிதாய் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியும் இருந்தனர். அவ்வருடத்தில் 36மில்லியன் மக்களுக்கு இத்தொற்றுக்கள் தொற்றியிருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாண்டுகள் கழிந்;துள்ள நிலையில் இதைவிட அதிகமாகவே காணப்படும். அத்துடன் இலங்கையின் பாலியல் தொழிலில் ஈடுபாடுகாட்டுகின்ற தொகையினரின் அதிகரிப்பானது நமது நாட்டிலும் அதிகமான ர்ஐஏஃயுஐனுளு நோய்க்குள்ளானவர்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

பொதுவாக மரணங்களுக்கும் நோய்வாய்ப்படலுக்கும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ள தொற்று நோய்களும், ஊட்டக் குறைபாடுகளும் தொடர்ந்தும் நிலவுகின்ற அதேவேளை எல்லைகளுக்குள்ளும், எல்லைகடந்து வெளிநாட்டுப் பயணங்கள், பூகோளமயமாக்கம் என்பனவும் இதன் பரவலுக்கு காரணமாகின. அத்துடன் சூழல் மாசடைதல், சூழல் அழிவு, நகரமயமாக்கல் என்பன துரித வளர்ச்சியடைதல், கைத்தொழில் மயமாக்கல், நகர்ப் பிரதேசங்களில் வாழ்க்கை வட்டத்தில் ஏற்படுகின்ற மாற்;றங்கள் போன்றவைகள் மனிதருக்கு இடையிலான உளரீதியான நெருக்கிடையை அதிகரிப்பதற்கான காரணங்களா கவும் காணப்படுகின்றன. இதன் விளைவாக தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் போன்ற இரு வகையான காரணங்களும் சுகாதார ரீதியான பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கின்றன.
மேலும், பாரிய சனத்தொகை வளர்ச்சி காரணமாகவும், 95வீதமானோர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில்தான் இந்நோய்க்கு உள்ளாக்;கப்படுவோர் காணப்படுவதாக கூறப்படுகின்றது. பாடசாலைப் பிள்ளைகள் இன்று தனியார் வகுப்புக்கு செல்கின்றனர் என்று கூறிவிட்டு ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறி இளம் வயதில்; தன்னைக் கெடுத்துக் கொள்கின்ற ஒரு நிலையும் காணப்படுகிறது. அண்மையக் காலங்களில் மலையகம், வடக்கு உட்பட நாட்டின் பலபாகங்களிலும் கவலை கொள்ளும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்ற பல சம்பவங்கள் பாலியல் ரீதியான செயற்பாடுகளாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், காதல் என்ற பேரில் மாணத்தை இழப்பதுவும் சமூக நோய்களுக்குள் இச்சம்வங்கள் எதிர்காலத்தில் உள்வாங்கப்படலாம் என்பதையே உண்மையாகும்.  

பாடசாலைப் பிள்ளைகள் பாலியல ரீதியில் உயிர்ப்பாகச் செயற்படத் தொடங்குகின்ற, புதிய அனுபவங்களைப் பெறவிரும்புகின்ற, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக சமவயதுக் குழுக்களின் ஆதிக்கத்;திற்கு ஆளாகின்ற பருவத்திலேதான் காணப்படுகின்றனர். பாலியல் நடத்தைகள், போதைப் பொருள்கள், நடிகர் நடிகைகளை பின்பற்றுதல் போன்ற விடயங்களில்; சமுதாயத்தில் இடம்பிடிப்பதற்காக உலகாதாய பௌதீகப் பொருள்களின் பால் அதிக நாட்டம் காட்டல், செல்போன், இன்டநெட் போன்ற நவீன தொழிட்நுட்பங்கள் காரணமாக இப்பருவத்தினர் கவரப்படுகின்றனர். இவைகளின் விளைவாக உருவாகும் பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக தானாகவே எச்.ஐ.வி தொற்றடையும் ஆபத்தை அதிகரிப்பவையாகவே அமைந்துவிடுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பாலியல்(விபசாரம்) தொழிலுக்காக விற்பனை செய்யப்படுகின்றனர். சமவயதுக் குழுவினர் அல்லது வளர்ந்தோரினால் பாலியல் துஷ்பிரயோ கத்திற்கு உள்ளாகின்றனர். இன்னும் கன்னியருடன் பாலியல் உறவு கொள்வதன் மூலமாக எயிட்ஸ் ஐ குணப்படுத்தலாம் என்கிற மூட நம்பிக்கைகளும் கிராமப்புறங்களில் சில இடங்களில் காணப்படலாம். இதிலிருந்து தவிர்ந்து கொண்டு எமது சந்ததிகளை நாம் பாதுகாத்தல் வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகங்கள் இன்று நாட்டின் நாலாபக்கங்களிலும் ஏற்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. எப்படியான தண்டகைள் இருப்பினும் இலகுவாக சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றனர். இவ்வாறான தண்டணைகள் அதிகபட்சமாக அமைவதற்கு புதிய சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நாட்டில் பாலியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது சமுதாயத் தினதும், அரசினதும் கடமையாகும்.

எனவேதான் சமுதாயத்தின் முன் இவ்வாறான நோய்த் தாக்கங்களின் உணர்வுகளை ஒப்புவிப்பதற்கு காத்திரமான பங்களிப்புக்களை செய்வதற்கு சுகாதாரத்துறைக்கு சமுதாய ஆர்வலர்கள் உதவுதல் வேண்டும். பொதுவாக சில வழிகளில் எச்.ஐ.வி ஏற்பட்டாலும் கட்டித்தழுவுதல், கைகுலுக்குதல், தொடுதல், கண்ணீர், மலசலகூடங்கள், இருமல், பூச்சிகள், தடாகங்களிலோ ஆற்றிலோ கடலிலோ நீந்துதல், குளித்தலால் இவை பரவுவதில்லை. நீங்கள்(ஆண் பெண்;) அறிமுகமற்ற ஒருவருடன் அல்லது பலருடன் பாலுறவு கொண்டீர்களானால், தன்னினச் சேர்க்கையி;ல் ஈடுபட்டீர்களானால், மேலே குறிப்பிட்ட நபருடன் பாலியல் தொடர்பு கொண்டால், போதைப் பொருள் ஏற்றிக் கொள்ளும் உபகரணங்களைப் பிறருடன் பரிமாறிப் பயன்படுத்தீர்களானால் உடனடியாகவே இரத்தப்பரிசோதனைக்கு தம்மை உட்படுத்தல் அவசியமாகும். 

இரத்தப்பரிசோதனைகள் அரச வைத்தியசாலைகளில் இலவசமாகவே செய்து கொள்ளப்படுகிறது. அதேவேளை எயிட்ஸின் அறிகுறிகளாக சிறு நோய்;கூட அதிகமாகத்தாக்கும், கழுத்து. அரை, அக்குள் போன்றவற்றில்; கட்டிகள் ஏற்படுதல், வாயில் உணவுக்குழாய் படை நோய், ஒவ்வாமையினால் தோலில் திட்டுக்கள் ஏற்படல், காசநோய், சிறுநீரகநோய் நரம்புநோய்கள் இலகுவாக ஏற்படல், முகப்புற்றுக் கழலை, மருந்தினால் கட்டுப்படாத வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், வாயில் வெள்தை; தடிப்புக்கள் போன்ற பலதரப்பட்டநோய்களுக்கு எயிட்ஸ்நோய்க கண்டவர்களில் ஏற்பட வாய்புண்டு.

எனவே 'இளமை இதமானது, எனினும் அறியாமை, பொறுப்பின்மை போன்ற காரணங்களினால் அதனை இழந்திட நேரிடலாம்' அதிலிருந்து பாதுகாப்புப்பெற நீங்கள் விழிப்பாய் இருங்கள். பொறுப்புடன் செயற்படுங்கள். அத்துடன் சமுதாயக் கட்டுப்பாடுகள், சமய விடயங்கள், தொடரான கற்றல் செயற்பாடுகள், பெரியோரின் வாழ்;க்கைய வரலாறுகளிலிருந்து நமது வாழ்க்கையை ஆரம்பித்து நம்மை நாம் பாதுகாத்திட திடசங்கற்பம் பூணுவதுடன், ர்ஐஏஃயுஐனுளு போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறவும், பாலியல் பற்றிய சரியான விடயங்களை அறிந்து, சிந்தித்து செயல்படுவதற்கு அனைவரும் தயாராகுதல் அவசியமாகும். 





No comments

Powered by Blogger.