அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான தொடர் செயலமர்வுகள்
அக்கரைப்பற்று கல்வி வலயம்,3 அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள தரம் 4,5மாணவர்களின் கற்றல்பேறுகளை விருத்தி செய்யும் முகமாக ஆரம்பக்கல்வி அபிவிருத்திப் பிரிவினரால் தொடர் செயலமர்வுகள் இன்றும் நாளையும் நடைபெறவிருக்கின்றன என அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் எஸ்எல்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கல்வியில் சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தில் காணப்படும் சில
விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்துப் பயிற்சி வழங்கும்
நோக்குடன் இச் செயமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. தரம் நான்கு ஐந்து வகுப்பு மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தி சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தினை பயனுறுதிவாய்ந்த முறையில் மாற்றி, அடைவு மட்டத்தினை உயர்த்துகின்ற நோக்குடனும், இவ்வேளைத்திட்டம் முன்னெடுக்கப் படுகின்றன. இத்திட்டத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளிலிருந்து குறிப்பிட்ட மாணவர்களைக் கொண்டு இன்று(2012.11.12) அட்டாளைச்சேனை மத்தியகல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஆரம்பக்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.ஏ. அப்துல் வகாப் தலைமையில் ஆசிரிய ஆலோசகர் எஸ்எல். மன்சூர் மற்றும் ஏசி.சுஹைர் ஆகியோரால் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாளை(2012.11.13) செவ்வாய்கிழமை பாலமுனை இப்னுஸீனா வித்தியாலத்திலும் ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான தலைமைத்துவம் தொடர்பான செலமர்வும் நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பான விடயங்கள் அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள எனவும் உரிய நேரத்திற்கு அதிபர்கள் தங்களது மாணவர்களை அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment