குவைத்தில் வடக்கு முஸ்லிம்களின் அவலம் குறித்து சிறப்பு ஏற்பாடுகள்
வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது 22 வது வருட சோக நினைவுகளை நினைவுகூர்ந்ததனை முன்னிட்டு குவைத் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் இரு விழிப்புணர்வு உரைகளை ஜும்ஆவின் பின்னர் ஏற்பாடு செய்தது.
ஜஹ்ராவில் அமைந்துள்ள மஸ்ஜித் ஹயாஜில் அஷ்ஷெய்க் ஆ.ஐ.ஆ.மன்சூர் (நளீமி)யும் குவைத் சிடியில் அமைந்துள்ள மஸ்ஜித் பாரிஸில் அஷ்ஷெய்க் ரு.மு.றமீஸ் (நளீமி)யும் 'வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் எமது பொறுப்புக்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இப்படி விசயங்களை தெறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteகுவைத் இக்ரா இஸ்லாமிய சங்கத்தின் உறுப்பினர்களே வடக்கு முஸ்லிம்களுக்கு உங்களது உதவிகள் தாராளமாக தேவைப் படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியுள்ள முஸ்லிம்களில் 40 பேருக்கு காணிகள் தேவை படுகின்றது. மேலும் புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீளக் குடியேற விரும்பும் இன்னும் ௬௦ பேருக்கு வீடுகள் தேவை. இதட்கான காணிகள் ஒரு குடும்பத்துக்கு ஆறு பெர்செஸ் படி 600 பேர்ச்சஸ் காணிகள் தேவை. இதட்காக 80 மில்லியன் ரூபாய்கள் தேவை படும். இந்தக் காணிகளில் வீடுகளை கட்டிக் கொடுக்க ஒரு வீட்டுக்கு ஐந்து இலட்சம் தேவை . இதன்படி நூறு வீடுகளை கட்ட ஐம்பது மில்லியன் ரூபாய்கள் தேவை. இந்த திட்டத்தை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ தாங்கள் செய்து கொடுக்கலாம்.
ReplyDeleteஇரண்டாவது திட்டப் படி ஏட்கனவே காணி உள்ளவர்களில் நூறு பேரை தெரிவு செய்து அவர்களின் காணிகளில் வீடுகளை கட்டிக் கொடுக்கலாம். அவ்வாறு ஒரு வீட்டை திருத்தியமைக்க ஐந்து இலட்சம் செலவாகும். சுவர்கள் மீளமைத்தல், கூரை போடுதல், கதவு நிலை ஜன்னல் போடுதல் மின்சார இணைப்புகளை செய்தல் போன்ற வேலைகளுக்காக இப்பணம் தேவை படும் . இதில் குவைத் இக்ரா இஸ்லாமிய நிறுவனம் தம்மாலான பங்களிப்புகளை செய்யலாம். தமது முடிவுகளை jaffnamuslim இணையத்தளமாக தெரிவிப்பதன் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் செயல் திட்டங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்ளலாம்.