Header Ads



பொல்கொல்லை மகாவலி கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா (படங்கள்)


(ஜே.எம்.ஹபீஸ்)

பல்கலைக்கழகம் செல்ல வாய்பில்லாத ஆனால் க.பொ.த. (உ.த) பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்கப் படும் நோக்கிலேதான் 1984 ல் ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா இன்று பொல்கொல்லை மகாவலி கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தததாவது,

இலங்கை வரலாற்றில் ஆசிரியத் தொழிலை எடுத்துக் கொண்டால் 1954 ல் சிரேஷ்ட அல்லது கனிஷ்ட தாரதரப் பத்திரம் கொண்ட ஆசிரியர் நியமனமங்கள் வழங்கப்பட்டன. 1960 மாணவ ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன். 1970களின் பின் தராதரப்பத்திரமற்ற ஆசிரியாகள் என்று என்ன உயர் தகுதியிருந்தாலும் அப் பெயர் கொண்ட நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆதன்பின் ஜனசவி ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. இவை எதுவும் பயிற்சி அற்ற நியமனங்களாகும். 

நியமனத்தின் பின் பலவருடங்கள் காத்திருந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்ற பின்தான் பதவி உறுதிப் படுத்தப் படும். ஆனால் 1984ன் பின் பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காது ஓரிரு புள்ளிகளால் பின்தள்ளப் பட்ட மாணவர்களுக்கு கற்பித்தல் டிப்லோமா பட்டங்களை வழங்கும் நோக்கில் முன்னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளாக இருந்தவை கல்விக்கல்லூரிகளாக மாற்றப்பட்டதுடன் சில புதிதாகவும் நவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இதுதான் ஆசிரியர் பயிற்சியின் வரலாரு. அந்த வகையில் பயிற்சியின் பின் நியமனம் பெறும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது என்றார்.

பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர் எச்.எம.;ஆர்.டி.ஹேரத் தெரிவித்ததாவது,

இலங்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால் கிபி ஐந்தாம் நுற்றாண்டு முதல் கல்வியை மையப் படுத்திய சமூக அமைப்பு இலங்கையில் இருந்ததை அறிய முடிகிறது. புhகியன் வருகை முதல் அதனை உருதி செய்ய முடிகிறது. இலங்கை குறை வளங்களைக் கொண்ட சிறிய நாடான போதும் பல்வி அறிவை முதலீடாகக் கொண்ட ஒரு நாடு என்பது பாகியன் வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஆக்காலத்தில் தாழை மர இலைகளில்தான் சுவகௌ; தயாரிக்கப்பட்டன. இதற்காக தாழை இலைகள் வெட்டப்பட்டு அதற்கு பாரி தட்டுப்பாடு நலவிய காலமாக அதை காணமுடிகிறது.  தற்போது பலா மரம்வெட்ட அனுமதி தேவைப் படுவது போல் அன்று தாழை மரங்களுக்கும் அனுமதிப் பத்திரம் அமுலில் இருந்துள்ளது. அவ்வளவு தூரம் அறிவு நூல்கள் சுவடிகளாக எழுதப் பட்டிருந்தன. இதனால்தான் அக்காலத்தில் இலங்கை எந்த நாட்டையும் எதிர் பார்க்காது சுய தன்னிறைவை அடைய எமது கல்வி வளம் உதவியது எனலாம்.
எனவே இலங்கை வரலாற்றில் கல்வியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பைக் காண முடிகிறது என்றார்.








No comments

Powered by Blogger.