Header Ads



மருதமுனையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா (படங்கள்)


(எம்.எம்.ஏ.ஸமட்)

மாணவர்களின் சாதனைகளை ஊக்கப்படுத்தும் ஒரு நேர்கணிச் செயற்பாடாக பாராட்டு விழாக்கள் அமையும். இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் கூறினார்.

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும்  வைபவமொன்று மருதமுனையில் நடைபெற்றது. 'செஸ்டோ ஸ்ரீலங்கா' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,,

கல்வி இன்றியமையாததொன்று. மாணவர்கள் குறிக்கோளுடன் கல்வியைத் தொடர்கின்றபோது பல சாதனைகளைப் படைக்க முடியும். மாணவர்கள் சாதனைகளைப் படைப்பதற்கு ஆசிரியர்கள் மாத்திமின்றி பெற்றோர்களும் பக்கதுணையாக இருக்க வேண்டும்.

அண்மைக்காலமாக இப்பிரதேச மாணவர்களில் சிலர் தேசிய மட்டப் பரீட்சைகளில் வியக்கதக்க பெறுபேறுகளைப் பெறுகின்றமை மன மகிழ்வை ஏற்படுத்துறது. இருந்தும், ஏனைய மாணவர்களும்  சிறந்த பெறுபேறுகளபை; பெற வேண்டும. இதற்கு இம்மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

சாதனை படைக்கும் மாணவர்கள் இவ்வாறான பாராட்டு விழாக்களினூடாக கௌரவிக்கப்படுகின்றபோது, அது அம்மாணவர்களை மெம்மேலும் சாதனைகளபை; படைக்கத் தூண்டுவதுடன் ஏனைய மாணவர்களிடத்திலும் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும். பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும். நாமும் இவ்வாறு கௌரவிக்கப்பட வேண்டும் என்ற ஆசையை; உள்ளத்தில் ஏற்படுத்தும். அவர்களும் சாதனையாளர்களாக மிளிர  இப்பாராட்டு விழாக்கள் நேர் கணிய ஊக்கியாகச் செயற்படுமென்றார்.





No comments

Powered by Blogger.