பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்க்கு "Best of Young" அமைப்பு கௌரவம் (படங்கள்)
(சுலைமான் றாபி)
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகதிற்கு தெரிவான மாணவர்களுக்கு நிந்தவூர் "Best of Young" அமைப்பினரால் பாராட்டி கௌரவம் அளிக்கப்பட்டது.
அதன் அமைப்பின் தலைவர் IL நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி றிபா உம்மா அப்துல் ஜலீல், காரைதீவு பிரதேச செயலாளர் திருவாளர் சிவ ஜெகராஜன், தென்கிழக்குப் பல்கலைகழக பதிவாளர் HA சத்தார், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், கிழக்குப் பல்கலைகழக பேரவை உறுப்பினர் அல் ஹாஜ் PT ஹசன் மற்றும் நிந்தவூர், காரைதீவு கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைகழக பதிவாளர் அவர்களுக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இம்முறை காரைதீவில் இருந்து 19 மாணவர்களும், நிந்தவூரில் இருந்து 45 மாணவர்களும், கடந்த வருடம் பல்கலைக் கழகதிற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் சகிதம் வந்து கௌரவம் பெற்றது இந்நிகழ்வில் சிறப்பான அம்சமாக காணப்பட்டது.
Post a Comment