கடன் அட்டையை திருடி, ATM இயந்திரத்தில் பணம் கொள்ளையடித்த பௌத்த பிக்கு கைது
(ஜே.எம்.ஹபீஸ்)
கடன் அட்டை ஒன்றைத் திருடி ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணமெடுத்ததாகக் கருதப் படும் பௌத்த துறவி ஒருவர் இன்று 16-11-2012 கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியை ஒருவரின் கடனட்டையைத் திருடி நான்கு சந்தர்ப்பங்களில் பணம் மீள எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்டிருந்த கெமரா மூலம் சந்தேக நபர் (பௌத்த துறவி)இனம் காணப்பட்டதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை நீதவான் திருமதி. ஜீ.ஏ.ஆர். ஆட்டிக்கல முன் சந்தேக நபரான பௌத்த பிக்குவை ஆஜர் செய்தபோது எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
Post a Comment