நாட்டில் அசாதாரண காலநிலை - 8 பேர் மரணம்
நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்தும் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை இடம்பெற்ற மரணங்கள் 8 ஆக அதிகரித்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி ஊடகப் பணிப்பாளர் சரத் லால் குமார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மின்னல் தாக்கம் மற்றும் வீடுகளுக்கு மேலாக மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்தமையாலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ரத்தினபுரி, அம்பலந்தொட்ட, காலி, தம்புள்ள, போன்ற மாவட்டங்களிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலேயே கடும் மழை காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுதவிர, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அபாய நிலை தோன்றியுள்ளது.
மலைப்பாங்கான பகுதிகளில் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றமையே அனர்த்த நிலைமைகளுக்கு பிரதான காரணம் என்று கட்டிட ஆய்வுகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.
Post a Comment