திவிநெகும 8 ஆவது பிரிவுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
திவிநெகும சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதன்படி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேவேளை, இந்த சட்டமூலத்தின் எட்டாவது பிரிவு, கருத்துவாக்கெடுப்பு மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச திவிநெகும சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
Post a Comment