முஹம்மது நபி அவமதிப்பு திரைப்படம் - எகிப்தில் 7 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு
நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து, படம் தயாரித்த ஏழு பேருக்கு, எகிப்து கோர்ட், மரண தண்டனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க் நகர இரட்டைக் கோபுர தகர்ப்பு நினைவு தினம், செப்., 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை, கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள, முஸ்லிம்கள் இதற்கு கண்டனம் செய்தனர். எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக, பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார்.
இந்த படத்தை தயாரித்த, எகிப்து நாட்டைச் சேர்ந்த, நகோலா பாஸ்லி உள்ளிட்ட ஏழு கிறிஸ்துவர்கள், தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்த சர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர்கள் மீதான வழக்கில், கெய்ரோ கிரிமினல் கோர்ட், நேற்று 28-11-2012 தீர்ப்பு கூறியது. மத துவேஷம் மற்றும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, ஏழு பேருக்கு, மரண தண்டனை அளிப்பதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மாஷா அல்லாஹ் சரியான தீர்ப்பு.
ReplyDelete