Header Ads



சிரியா நாட்டு 7 இராணுவ தளபதிகள் துருக்கியில் தஞ்சம்


சிரியா ராணுவ தளபதிகள், ஏழு பேர், துருக்கி நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகும் படி கோரி, கிளர்ச்சியாளர்கள், 18 மாதங்களாக போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆசாத், பதவி விலகும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், சிரியா அதிபருக்கு, சீனாவும், ரஷ்யாவும் ஆதரவளித்து வருகின்றன.

ஆசாத் பதவி விலகாத காரணத்தால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுதம் வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில் சண்டை தொடர்கிறது.ஓயாத சண்டையால், 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதற்கிடையே, சிரியா நாட்டு ராணுவ தளபதிகள் ஏழு பேர், துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளதாக, துருக்கி அரசு தெரிவித்துள்ளது. இந்த தளபதிகள், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராட திட்டமிட்டுள்ளதாக, துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




No comments

Powered by Blogger.