மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் 6 மண்டையோடுகள் மீட்பு
(ஜே.எம்.ஹபீஸ்)
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆறு மண்டை ஓடுகள் மற்றும் எழும்புகள் போன்றன (2012 11 28) மாலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில் கடந்த 26ம் திகதி கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி ஒன்று வெட்டப்பட்ட போது எழும்பு துண்டு ஒன்று கிடைத்ததை அடுத்து இப்பிரதேசத்தை அகழ்ந்தெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாத்தளை நீதவான் சதுரிகா டி சில்வா, மற்றும் வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன ஆகியோர்; முன்னிலையில் இவ் எழும்புகள் தோண்டப்பட்டன. இப் பிரதேசத்திலிருந்து ஆறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படுள்ளன. இவை எக்காலத்திற்கு உறியவை எனக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Post a Comment