Header Ads



தெலும்புகொல்ல ஹுதா பள்ளிவாசல் முறுகல் - 6 மணித்தியால பேச்சின் பின்னர் சமரசம்


குருணாகல், தெலும்புகொல்ல, ஹுதா பள்ளிவாசலும், பள்ளிவாசலில் இருந்தவர்களும் தாக்குதல்களுக்குள்ளாகியதையடுத்து முரண்பட்டுக் கொண்ட இரு தரப்பினருக்குமிடையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சமரசத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளையினதும், குருணாகல் மாவட்ட கிளையினதும் உலமாக்கல் தெலும்புகொல்ல, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் ஐவரையும், ஹீதா பள்ளிவாசல் நிர்வாகிகள் ஐவரையும் அழைத்து நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்தே இச்சமரசம் ஏற்பட்டுள்ளது.

தெலும்புகொல்லையிலிருந்தும் 5 மைல் தூரத்திலுள்ள ரம்புக்கந்தெனிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் இச்சந்திப்பு 6 மணித்தியாலயமாக இடம்பெற்றது. இரு தரப்பினரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர். உலமாக்கள் தெலும்புகொல்ல கிராமத்துக்கும் விஜயம் செய்து மக்களுடன் உரையாடியதுடன் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலையும் பார்வையிட்டனர்.

கொள்கை முரண்பாடுடைய இரு தரப்பினரும் பிரச்சினைகளின்றி தமது சமயக் கடமைகளை சமாதானமாக முன்னெடுப்பதாக உறுதியளித்தனர். சமரச முயற்சி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையொன்று உலமா சபையின் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறிப்பிட்ட சமரச குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உபதலைவரும் கண்டி மாவட்ட தலைவருமான மௌலவி எம்.எச்.புர்ஹான், உலமா சபையின் பிரசார செயலாளரும் கண்டி மாவட்ட உபதலைவருமான மௌலவி எச்.உமர்தீன், குருணாகல் மாவட்ட தலைவர் மௌலவி சித்தீக், குருணாகல் நூரியா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி முனவ்வர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

4 comments:

  1. masha allah.jammiyyathul ulamawai allah porundik kolwaanaaha..thodarha un pani...

    ReplyDelete
  2. இந்த சமரசம் குர்ஆன்,ஹதீஸுக்கு எதிரானவர்களை காப்பாற்றும் நோக்கில் முன்நெடுத்திருந்தால் பிழையான தாகும்,உண்மையில் அல்லாஹ்விற்கு அச்சப்பட்டு,முஸ்லிம்களின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு முன்நெடுத்திருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியுண்டு.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் உலமாக்களின் வேலையை உலமாக்கள் செய்யணும் , அரசியல் வாதிகளின் வேலையை அவர்கள் செய்யணும் என்ற உண்மையை இம் முடிவு தெளிவு படுத்துகிறது . ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது இதுதான் . ஒற்றுமை படுத்தும் சமாதான முயற்சியில் ஈடுபட்ட உலமாக்களுக்கும் , இரு தரப்பினருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ், நல்லதாகவே நடக்கட்டும். ஜம்மியதுல் உலமா வெரி வெரி ஸ்லோ. அதனால தான் அரசியல் வாதிகள் இதில் தலை போட வேண்டி வந்தது. எல்லோரையும் போல் தானும் வேடிக்கை பார்க்காமல் உடன் நடவடிக்கையில் இறங்கிய அரசியல் வாதிகளை இகழ்வது நியாயம்மில்லை. ஜம்மியதுல் உலமா தவிர யார் சொல்லியும் நாம் கேட்கவே மாட்டோம் என்று ஒரு சாரார் பிடிவாதமாய் இருப்பது தமக்கு தெரிந்திருந்தும் ஆமை வேகத்தில் தாம் செயல் பட்டது துரதிஷ்டமே.

    ReplyDelete

Powered by Blogger.