ஜனாதிபதி மஹிந்தவின் 67 ஆவது பிறந்தநாள் - காத்தான்குடியில் மரம் நடும் நிகழ்வு
(எப்.எம்.பர்ஹான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனையின் பேரில் இலங்கை நாட்டில் அருகிவரும் மரங்களில் முதல்கட்டமாக வேப்ப மரங்களை நடும் ஆரம்ப நிகழ்வு, கொட்டும் மழைக்கு மத்தியில் அ.இ.மு.காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம். சிப்லி பாரூக்கினால், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான வீதியில் இன்று (13.11.2012) செவ்வாய்க்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம்மரம் நடும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எப்.எம். சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஆசிரியர் பாக்கீர், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பிராந்திய காரியாலய உதவியாளர் நாஸர் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாம்பழம், காட்டு ஜேசி, வேப்ப மரங்களில் அருகி வரும் இணங்கள் கொண்ட மரங்கள் போன்ற 10 மரங்கள் இன்று பிற்பகல் முதல் இரவு வரை நடப்பட்டுள்ளதாக கிழக்கு பிராந்திய காரியாலய உதவியாளர் நாஸர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் 67வது பிறந்த தினத்தையோட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 67 மரங்கள் நடப்படவுள்ளதாகவும், 67வது இறுதி மரத்தை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எமல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நடவுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த மரங்கள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் ஆகியோரினால் காடுகளுக்குச் சென்று பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment