சவூதி அரேபியாவிலிருந்து 65 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 65 இலங்கை பணியாளர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முற்பகல் 10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
குறிப்பிடப்பட்ட வேலை தளத்திலிருந்து வெளியில் சென்று பணியாற்றிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நாட்டிற்கு வருகைத் தந்த பணியாட்களுக்கு பஸ் கட்டணத்தை பெற்றுக் கொடுத்து அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைபப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment