இலங்கைக்கு வருடாந்தம் 6,50,000 மெற்றிக் தொன் சீனி தேவைப்படுகிறதாம்..!
அடுத்து வரும் ஏழு வருடங்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டமொன்றின் கீழ் சீனி இறக்குமதியை முற்றாகவே நிறுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இலங்கையை சீனி உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்யமுடியும் என்று கருதப்படுகிறது.
இலங்கையில் வருடாந்தம் மக்களின் பயன்பாட்டுக்கென 6,50,000 மெற்றிக் தொன் சீனி தேவைப்படுகிறது. பெலவத்தை சீனி உற்பத்தி நிறுவனத்தில் 30 ஆயிரம் மெற்றிக்தொன் சீனியும், செவனகலை சீனி உற்பத்தி தொழிற்சாலையில் 10 ஆயிரம் மெற்றிக்தொன் மற்றும் ஹிங்குராணை தொழிற்சாலையில் 2 ஆயிரம் மெற்றிக்தொன் சீனியும் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன.
இன்னும் ஏழு வருடங்களுக்குள் 7 இலட்சம் மெற்றிக்தொன் சீனியை இலங்கையில் உற்பத்தி செய்யும் வகையில் புதிய திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன் மூலம் சீனி உற்பத்தி நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஊழியர்களுக்கு அதிகளவில் சலுகைகளை வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.
அதற்கமையவே பெலவத்தையிலுள்ள லங்கா சீனி உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதேவேளை சீனி உற்பத்திக்கு மூலப்பொருளான கரும்புச் செய்கையை ஊக்குவிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த வருடம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஹெக்ரெயர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்
Post a Comment