நியூயோர்க்கில் 5 மில்லியன் டொலருக்கு ஒரு மாடியை வாங்கியுள்ள இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள கட்டடம் ஒன்றின் ஒரு மாடியை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளது.
சர்வதேச நிதி ஒத்துழைப்பு சம்பந்தமான சிரேஷ்ட அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான அமுனுகம இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக, விலைக்கு வாங்கப்பட்டுள்ள அந்தக் கட்டடம் 68 ஆயிரம் டொலர்கள் என்ற வருடாந்தக் குத்தகை அடிப்படையில் மூன்றாண்டு காலத்துக்கு வெளிவிவகார அமைச்சுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் நிதிச்சபையின் அனுமதியை அடுத்து 2011 ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி அந்த மாடித் தொகுதி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அதன் அளவுப் பிரமாணம் 12 ஆயிரம் சதுர அடிகள் என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment