50 மில்லியன் ரூபா செலவில் 16 உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வாகனங்கள் கையளிப்பு
(ஜே.எம். வஸீர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் இனங்காணப்பட்ட 15 உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை சீராக மேற்கொள்வதற்கும் வீதி அபிவிருத்திப் பணிகளை சீராக மேற்கொள்வதற்கும் தேவையான வாகனங்களை உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இன்று வழங்கி வைத்தார். இவ்வாகனங்களை பெற்றதனால் தத்தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாகனம் இன்மையால் தாம் எதிர் நோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்
ஏ.எல்.எம். அதாஉல்லா,
இன்று எமது அமைச்சின் மூலம் சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை இனங்காணப்பட்ட 15 உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கியுள்ளோம். இந்நிகழ்வை நாம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தையும் அன்னாரின் பதவிப் பிரமாணத்தை கௌரவிக்கும் வகையிலேயே இன்று ஏற்பாடு செய்தோம். இன்றைய நாள் உங்களுக்கு முக்கியமாதொரு நாளாகும். இங்கு பல பிரதேச மற்றும் மாநகர சபைகளின் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் செயலாளர்களும் உள்ளீர்கள் நீங்கள் இன்று நாம் வழங்கிய வாகனங்கள் இல்லாததனால் அன்றாட பல தேவைகளுக்கு முகம்கொடுக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். இந்த வாகனங்களைப் பெற்றதன் மூலம் உங்களின் அவ்வாறான பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீருமென நான் எதிர்பார்க்கின்றேன். மேலும் அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையையும் வழங்குவீர்கள் எனவும் மேலும் எதிர்பார்க்கின்றேன்.
எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் வாகனம் இன்றி சிரமப்படும் இன்னும் பல உள்ளுராட்சி சபைகளுக்கு வாகனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் யுத்த சூழல் இல்லாததனாலேயே இவைகளையெல்லாம் இலகுவாகச் செய்கின்றோம். இல்லாவிடின் பணத்தை யுத்தத்திற்காகவே செலவிட வேண்டியிருந்திருக்கும். எனவே யுத்தத்தை முடித்து நாட்டில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஏற்படுத்திய நமது ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ அவர்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டப் பணிப்பாளர் மங்கலிகா, திட்டப்பணிப்பாளர் ஸ்ரீவர்த்தன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளுராட்சி சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
01. நொச்சியாகம பிரதேச சபை
02. கலேந்பின்துனுவௌ பிரதேச சபை
03. இப்பலோகம பிரதேச சபை
04. கந்தளாய் பிரதேச சபை
05. கோரலைப்பற்று பிரதேச சபை
06. மத்திய கண்டி பிரதேச சபை
07. கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை
08. மண்முனைப்பற்று பிரதேச சபை
09. போரதீவு பிரதேச சபை
10. ஹக்மன பிரதேச சபை
11. அம்பாந்தோட்டை பிரதேச சபை
12. முசலி பிரதேச சபை
13. யாழ்ப்பாணம் மாநகர சபை
14. வவுனியா வடக்கு பிரதேச சபை
15. அம்பாந்தோட்டை மாநகர சபை
Post a Comment