ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சொற்போர் ஆரம்பம் - 5 ஆம் திகதி முக்கிய தீர்மானம்
ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வியாழக்கிழமை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் விவாதிக்கப்படவுள்ளது.
இதன் போது இலங்கை தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த அறிக்கையினை சமர்ப்பிக்க உள்ளார்.
இலங்கை சார்பில அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட, சட்டமா அதிபரின் பிரதிநிதி குழுவினர் அமர்வில் பங்கேற்கின்றனர். இந்த அமர்வில் இலங்கை குழுவானது, நாட்டின் எதிர்வரும் 5 வருடங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான மேம்பாட்டு திட்டங்களை முன்வைக்க உள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள், கியூபா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், சபை அமர்வின் போது கேள்வியெழுப்பவுள்ளன.
இந்த நிலையில், இன்று முதல் விவாதம் நடைபெற்று எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment