Header Ads



சீனாவில் 4 மாத குழந்தைக்கு முளைத்திருந்த வால் அகற்றப்பட்டது


தெற்கு சீனாவில் ஹாங்காங் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ள பழமையான நகரம் குவாங்சோ. இங்கள்ள ஆஸ்பத்திரியில் 4 மாத குழந்தையின் இடுப்பு எலும்புக்கு கீழே இளம் சிவப்பு நிறத்தில் வளர்ந்திருந்த வால் போன்ற பகுதி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. 

இடுப்பு எலும்புக்கு கீழே இதைப்போன்ற வால் வளர்வதை 'ஸ்பைனா பிஃபிடியா' என்று டாக்டர்கள் கூறுகின்றனர். சுற்றுச்சூழல், மரபணு போன்ற கோளாறுகளால் இந்த வால் பகுதி தோன்றுகிறது என உடற்கூறியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் நடந்த ஆபரேஷனில் 4 மாத குழந்தையின் 6 செ.மீட்டர் நீள வால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. 

No comments

Powered by Blogger.