Header Ads



450 ஆபாச படங்களை வைத்திருந்த பிக்குவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு


(Vi) ஆபாச படங்களை தனது மடிக்கணனியில் வைத்திருந்த பிக்கு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிஓய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து கடந்த 6 ஆம் திகதி குறித்த பிக்கு வெலிஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவருடைய மடிக்கணனியில் பல ஆபாச படங்கள் இருந்துள்ளன. மேலும் இவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு தன்னை ரத்மலான பாலித தேரர் என அடையாளம் காண்பித்த போதிலும் அவருடைய அடையாள அட்டையில் மித்தெனிய உதித்த என பெயர் குறிப்பிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்துள்ளதுடன் அப்பிரதேச மக்களிடம் தன்னை வேறு தகவல்களை கூறி அடையாளப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதோடு இவரின் மடிக்கணனியில் சுமார் 450 ஆபாச படங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.