இலங்கையின் செய்மதி தயாரிப்புக்கு 4.200 கோடி ரூபா செலவு
(un) இலங்கை சுப்ரீம்செட் - 1 என்ற தனது முதல் செய்திமதியை விண்ணுக்கு அனுப்புவதற்காக 4 ஆயிரத்து 200 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இலங்கை இந்த நிதியினை சீனாவிடம் இருந்து முற்று முழுதாக கடன் அடிப்படையில் பெற்றே இந்த செய்மதியினை செய்துள்ளது.
இதேவேளை, உலகில் செய்மதியை அனுப்பும் நாடுகளில் 45 ஆவது நாடாக இலங்கை இருப்பதுடன் தெற்காசியாவில் 3 ஆவது நாடாகவும் பெருமைப் பட்டுக் கொள்கின்றது.
எனினும் இது விண்ணுக்கு எவப்பட்டிருந்த நிலையில் காலநிலை சீரற்று இருப்பதாலும் , இயந்திரக் கோளாறினாலும் ஏவப்படுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கம் செய்மதிக்காக சீனாவிடம் 4200 கோடி கடன் வேண்டிய விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment