மூளையின்றி வாழ்ந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)
அமெரிக்காவில் உள்ள கொலொராடோவை சேர்ந்த நிகோலஸ் கோகி (3). மூளை இன்றி பிறந்தான். இதுபோன்று 10 ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கிடையே, மூளை இன்றி பிறந்த நிகோலஸ் உயிர்வாழ மிகவும் சிரமப்பட்டான். இருந்தும் விசேஷ மருத்துவ உபகரணங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. ஆனால், பல மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தான். இந்த நிலையில் அவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த தகவலை அவனது பாட்டி ஷெர்ரி கோகுட் தெரிவித்தார். வைரஸ் தாக்கியதால் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்ட அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் பலனின்றி அவன் உயிரிழந்தான்.
Post a Comment