வெலிக்கடை சிறை கலவரம் - முஸ்லிம் கைதிகள் 3 பேர் வபாத்
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த 27 பேருமே கைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் கைதிகள் மூவரும் வபாதகியுள்ளனர்.
2 - சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)
3 - மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் காவற்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே பெரும்பாலான கைதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
"கண்டிக்கப்பட வேண்டிய திட்டமிடப்பட்ட படுகொலையாக இது காணப்படுகிறது. நாட்டில் நிலவும் ஆட்சி பலவீனமடைந்துள்ளதையே இந்தக் கலவரம் வெளிக்காட்டுகிறது" என மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளி தொடக்கம் சனி வரை தொடர்ந்து இடம்பெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைக் கலவரம் தொடர்பாக விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அழைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிறைச்சாலைக்குள் சிறிலங்கா இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தியிருக்கக் கூடாது என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சிறைக் கைதிகள் ஏதாவது சட்டரீதியற்ற பொருட்களை வைத்திருக்கின்றனரா எனத் தேடிக்கொண்டிருந்தபோது, அதற்கு உதவியாக மேலும் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் சிறைக்குள் நுழைந்த வேளையில் அவர்களை சிறைக்கைதிகள் சுற்றிவளைத்துக் கொண்டனர்.
இதன் போதே இங்கு கலவரம் ஏற்படத் தொடங்கியது. சிறப்பு அதிரடிப்படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்திய போது இதனை முறியடிப்பதற்காக சிறையிலிருந்த ஆயுதக் களஞ்சியத்தை சிறைக் கைதிகள் உடைத்து ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.
இக்கலவரத்தின் போது சில சிறைக்கைதிகள் சிறையின் கூரைக்கு ஏறிச்சென்று அங்கிருந்தவாறு இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். சிறையிலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது மூன்று பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட நான்கு கைதிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இவ்வாறானதொரு கலவரம் ஆரம்பித்த போது, அங்கிருந்த படையினர் சிறைக்கைதிகளை அவர்களது சிறைக்கூடுகளிலிருந்து வெளியில் இழுத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக கொல்லப்பட்ட கைதிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Post a Comment