Header Ads



பள்ளிவாசல் விவகாரத்தில் உடன்பாடு இல்லை - 34 பேருக்கு தொடர் விளக்கமறியல்


(இக்பால் அலி)

குருநாகல் தெலும்புகொல்ல பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கும் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்குமிடையே கொள்கை முரண்பாட்டினால் நிலவிய வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினருக்கிடையே சமசரம் ஏற்பாடாமையின் காரணமாக  இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 34 பேரையும் எதிர் வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மஜிஸ்ரேட் நீதவான் திருமதி காவிந்தியா நாணயக்கார உத்தரவு பிறப்பித்தார்.

முரண்பட்டுக் கொண்ட இரு தரப்பினரும்  குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில இரு தரப்பினரிடை நடைபெற்ற சமரச முயற்சியைத் தொடர்ந்து முறைபாடுகளை விலக்கிக் கொள்ளவற்காக நேற்று கொக்கெரெல்ல பொலிஸ் நிலையம் சென்றனர். அங்கு பதிவு செய்யப்பட்ட 20 முறைப்பாடுகள் மட்டும் சமரசமாகத் தீர்த்துக் கொள்ளப்பட்டன.  ஏனைய  நான்கு முறைப்பாடுகள்  இருதரப்பினரும் நீதி மன்றத்திற்கு சமூகமளித்து சட்டரீதியாக சமரசம் செய்து கொள்ளும்படி பொலிஸ் பொறுப்பதிகாரி வேண்டிக் கொண்டார். இதில் பள்ளிதாக்குதல், மரம் வெட்டி வீழ்த்தல் பற்றி இரு முறைப்பாடுகள் மற்றும் கொலை மிரட்டல் என நான்கு வழக்குகள் சமர்ப்பிக்க முடிவுவெடுக்கப்பட்டது இதற்கு இணங்க இரு தரப்பினரும் இன்று நீதி மன்றம் சமூகமளித்திருந்தனர்.

பெரிய பள்ளிவாசல் தரப்புச் சட்டத்தரணி புதிய பள்ளிவாசலில் தொழுகையோ ஜும்ஆவோ நடத்தக் கூடாது என முனவைத்த வாதத்தின் பிரகாரம் ஹுதாப் பள்ளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த வாதத்தின் படி நீதவான் இந்த உத்தரை பிறப்பித்தார்.

சமசரம் பிளவுபட்டதன் காரணமாக பெரிய பள்ளிவாயல் தரப்பிலிருந்து 30 பேர்களையும்  தாக்குதலுக்குள்ளான  ஹுதாப் பள்ளிவாசல் தரப்பிலிருந்து 4 பேருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. அல்லாஹ்வின் மாளிகையில் அவனை தொழக்கூடாது, அவன் மார்க்கத்தை பேசக்கூடாது அவனை நன்றிகூறக்கூடாது என்று தடுத்து நிறுத்த சட்டத்தரணி போட்டு தடை பண்ண முயற்சிக்கும் இவர்களை என்ன வென்று அழைப்பது? இவர்களுக்கு இது தவறானது என்று எடுத்துக்கூற கடமைப்பட்டவர்கள் தலைப்பிறை பார்ப்பது, ஹலால் உத்தரவாதம் கொடுப்பது போன்றவத்துடன் தன் கடமையை வரையறுத்துக்கொண்டால் இலங்கையில் இஸ்லாமிய சமூகத்தின் எதிர்காலம் எப்படியாகுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.