யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நவீனமயமாகிறது - ஜப்பான் 3000 மில்லியன் உதவி
ஜப்பானிய அரசாங்கத்தின் 3000 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் தற்சமயம் நவீன மயப்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணம் போதனாஸ்பத்திரியை டிசம்பர் மாத முற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.
5 மாடிகளைக் கொண்ட இந்த போதனா ஆஸ்பத்திரியில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, ஸ்கான், அதிதீவிர சிகிச்சைக்கூடம், மற்றும் நோயாளிகள் தங்கியிருக்கும் வாட்டுக்கள், சத்திரசிகிச்சை நிலையங்களுடன், டாக்டர்கள் மற்றும் தாதிமாருக்கான வசிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு சகல வசதிகளையும் கொண்ட ஒரு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும்.
இந்த ஆஸ்பத்திரியில் பிராணவாயுவைத் தயாரிக்கும் ஒரு நிலையமும் ஏற்படுத்தப்படுவதுடன் இந்த ஆஸ்பத்திரிக்கான மின்சார வசதியை சூரிய சக்தி மூலம் பெறவும் வசதிகள் செய்யப்படும். இந்த ஆஸ்பத்திரியின் புனரமைப்புப் பணிகளை ஜப்பானிய அரசாங்கம் இலவசமாக செய்துகொடுக்கும்.
இங்கு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும் அமைக்கப்படுவதனால் மஹரகமை புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வரும் தூர இடத்து நோயாளிகள் இனிமேல் யாழ்ப்பாண போதனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளைப் பெறக்கூடியதாக இருப்பது குறித்து இப்பகுதி வாசிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Post a Comment