யாழ்ப்பாணத்தில் 3 முஸ்லிம்கள் காயம்
(பா.சிகான்)
யாழ் முஸ்லீம் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற குடும்பப்பிரச்சினை ஒன்றில் அலவாங்கினால் தாக்கப்பட்ட இருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 2 இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமா,மருமகன் ஆகியோரே அலவாங்கினால் தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த தாக்குதலில் ஈடுப்பட்ட நபர்களுக்கும் தாக்குதலுக்கு உள்ளானவர்களிற்கும் இடையிலான அநாகரிக வார்த்தை பிரயோகங்களே தாக்குதல் இடம்பெற காரணம் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகிறது.
இதே வேளை பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் ஆட்டோ சாரதியொருவர் வாள்வெட்டுக்க இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது கைவிரல்கள் இரண்டு வாள் வெட்டினால் துண்டிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக யாழ் முஸ்லீம் பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
--
Post a Comment