கையுறையொன்றில் பௌத்த சின்னம் - பதுளையில் 2 முஸ்லிம் சகோதரர்கள் கைது
பதுளை நகரில் நேற்று வியாழக்கிழமை ஒரு மணி அளவில் முஸ்லிம்களது பிரதான வர்த்தக நிலையத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் கையுறையொன்றினை வாங்கும் போது அதில் புத்தர் சிலையும் பௌத்த சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்ததன் காரணமாக இருவர் பொலிஸார் கைசெய்யப்பட்டுள்ளனர்.
கையுறையொன்றினை வாங்கிச் சென்று அரை மணி அளவில் வந்து இந்த சந்தேக நபர்களில் ஒரு வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் மற்றும் கடையில் பணிபுரிந்த கடை உரிமையாளரின் சகோதரரும் ஆகிய இருவருமே பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பதுளை நகர் வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம்கள் மீது சிங்கள மக்களை ஆத்திரமூட்டக் கூடிய வகையிலும் முஸ்லிம்களது வர்த்தக நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் இது திட்டமிடப்பட்ட சதியாகும் இதனைக் கொள்ள வேண்டியுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.
மலையக முஸ்லிம் அமைப்பின் இணைப்புச் செயலாளர் எ. எம். முஸம்மில் கருத்துத் தெரிவிக்கையில்,
பதுளையில் முஸ்லிம்கள் மீது பொது பல சேன அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம், ஆர்ப்பாட்டப் பேரணி என பல்வேறு ரீதியலான நெருக்குதல்களை கொடுத்து வருவதாகவும் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எவரும் எடுக்கவில்லை எனவும் யாருமே கேட்பார் அற்ற பகுதியாக பதுளை முஸ்லிம் மக்கள் உள்ளனர் எனவும் கவலையுடன் தெரிவித்தார்.
Post a Comment