ஹமாஸ் அமைப்பிற்கு 25 வயது - துருக்கி பிரதமர் காசா செல்கிறார்
துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டோகன், ஹமாஸ் தலைவர் காலித் மிஷாலுடன் இணைந்து அடுத்த வாரம் காசாவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் அங்கு செல்வதும் இதுவே முதல் முறையாகும்.
எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி தம்முடன் காசாவுக்கு செல்ல ஹமாஸ் தலைவர் மிஷால் அழைப்பு விடுத்ததாக எர்டோகன் தெரிவித்தார் என துருக்கி பத்திரிகையாளர் ‘டுடே சமான்’ செய்தி வெளியிட்டுள்ளது. “நேற்று நான் கலித் மிஷாலுடன் உரையாடினேன். நான் உங்களுக்கு அதிர்ச்சி தகவலை அளிக்க விரும்புகிறேன். அவர் என்னை அழைத்தார். நான் தயாராக இருக்கிறேன் என கூறினேன்” என்று எர்டொகன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி வைபவம் காசாவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த வைபவத்தில் பங்கேற்க அதன் தலைவர் காலித் மிஷால் மற்றும் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் காசா செல்லவுள்ளனர். இதில் மேற்குக் கரையில் பிறந்த காலித் மிஷால் 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின் போது அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் முதல் முறையாக காசாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் அமைப்பின் 25 ஆம் ஆண்டு பூர்த்தி வைபவம் டிசம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டியபோதும், அது முன் கூட்டியே ஆரம்பிக்கப்படுகின்றது.
ஏர்டோகன் இதற்கு முன்னர் பலமுறை காசாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டபோது பல காரணங்களால் அது தடைப்பட்டது. tn
துருக்கியா பிரதமர் அவசரப்படுகிறார் என்று தோனுகிறது இன்னும் சில காலங்கள் பொறுத்து செல்லலாம் என்பது என் கருத்து அல்லாஹ் அவரையும் ஏனைய நல்லோர்களையும் பாதுகாப்பானாக.
ReplyDelete