Header Ads



சிறுவர் துஷ்பிரயோகத்தில் 252 குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் இலங்கையில் தஞ்சம்

(அததெரன)

சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய கத்தோலிக்க அருட் சகோதரரான பெர்னாட் கெவின் மெக்ராத் என்ற மதகுரு இலங்கையில் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் இந்த மதகுரு வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மதகுருவிற்கு எதிராக நியூகாசல் நீதிமன்றில் 252 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. 

இந்த மதகுரு நியூசிலாந்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மதகுரு இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறெனினும் குறித்த மதகுருவிற்கு தண்டனை விதிப்பது குறித்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 

No comments

Powered by Blogger.