மண்முனை முஸ்லிம் மையவாடியில் 24 வருடங்களுக்கு பின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள்)
(மொஹமட் பாயிஸ்)
நாட்டில் நிலவி வந்த இனப்பிரச்சினை காரணமாக 1988ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இன்று மண்முனை முஸ்லிம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
முஸ்லிம் தமிழ் நல்லுறவை விரும்பாத சிலர் மண்முனையில் உள்ள முஸ்லிம் மையவாடியில் ஜனாசா அடக்கம் செய்யப்படக்கூடாது என கூறியிருந்த போதும் மண்முனை பிரதேச தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் மர்ஹூமா அவ்வாப்பிள்ளை என்ற 78 வயது மூதாட்டியின் ஜனாஸா இன்று 29-11-2012 அசர் தொழுகையின் பின் மண்முனை பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஜனாஸா நிகழ்வில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஒல்லிக்குளம் மற்றும் மண்முனை பிரசேத நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment