''இலங்கையில் பிறக்கின்ற போதே 200 ரூபாவுடன் பிறக்கவேண்டும்'' அடுத்தவருடம் பூப்படைதலுக்கும் வரி
இலங்கையில் பிறக்கின்ற ஒவ்வெரு குழந்தையும் பிறக்கும் போதே 200 ரூபாவை கொண்டு வர வேண்டும் ஏன் என்றால் இலங்கையில் தற்போது பிறப்பு வரி அறவிடப்படுகிறது என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
இந்த முறை வரவு செலவு திட்டத்தில் குடும்பம் ஒன்று மூவாயிரத்து 500 ரூபா அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.
காரணம் இந்த வரவு செலவு திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட உள்ள மொத்த வரியை இணைத்தால், ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றிட்கு 3500 ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
அத்துடன் விவாகம் மற்றும் இறப்பிற்கும் வரி உள்ளது. மனித வாழ்வில் இவைகள் தான் இடம்பெறுகின்றன என்று அரசாங்கம் எண்ணுகிறார்கள். நிச்சயமாக அடுத்த வரவு செலவு திட்டத்தில் பூப்படைதலுக்கு இந்த அரசாங்கம் வரி அறவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment