Header Ads



ஹுதா பள்ளிவாசல் விவகாரம் - 2 பள்ளிவாசல் நிர்வாகிகளும் சலாம் கொடுத்து இணக்கப்பாடு


கடந்த பத்து நாட்களாக கொள்கை முரண்பாடு காரணமாக தாக்குதலுக்குள்ளான குருநாகல் தெலும்புகொல்ல ஹுதா பள்ளி வாசலுக்கும் பெரிய வாசல்களுக்குமிடையே  நிலவிய பிரச்சினை  ஒரு சுமூகமான நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தத்தமது கொள்கைளின் பிரகாரம் மார்க்க விடயங்களைக் கடைப்பிடித்த போதிலும் ஊரின் பொதுவான காரியங்களில் ஒருமித்து ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். இரு தரப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமையால் குருநாகல் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மாஅதிபருடன் கதைத்து அம்முறைப்பாட்டை விலக்கிக் கொள்வதற்கு தாம் உதவி செய்யப்போவதாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

குருநாகல் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஆரம்பித்த வைத்த இந்த இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக அப்துல் சத்தார் இரு தரப்பினரிடையே தொடந்து சமசர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். குருநாகல் நகரில் கொள்கை முரண்பாடாடு காரணமாக தாக்குதலுக்குள்ளான தெலும்புக்கொல்ல பள்ளிவாசல் தரப்பைச் சார்ந்த நிர்வாகக் குழுவினருக்கும் பெரிய பள்ளிசாவல் நிர்வாகக் குழுவினருக்குமிடையே இன்று இரசியமான  சமரசக் கூட்டம் நடபெற்றது. இந்தக் கருத்தினை இக் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அப்துல் சத்தார் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து  கருத்துத் தெரிவிக்கையில்,,

என்னைப் பொறுத்தவரை எந்தக் கட்சியும் எந்தக் கொள்கையும் சார்ந்தவன் அல்ல. நான் பொவாக முஸ்லிம் சமூக நோக்கம் கருதிச் செயற்படுவன். உங்கள் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்மெனக் கருதியே குருநாகல் மாவடட பிரதிப் பொலிஸ் அதிபரிடம் இது தொடர்பாக நான் பல முறை கதைத்து இந்தக் கட்டம் கட்டமான பேச்சையை நடத்த முன்வந்தேன்.

கடந்த பத்து நாட்களாக தங்களுடைய ஊரில் பெரும்பாலன ஆண்கள் தலைமறைவாக வாழ் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்தமையின் காரணமாக அந்தச் சட்டத்தற்கு அடிபணிந்து ஆண்கள் அச்சத்துடன் அங்மிங்கும் தலைமறைவாகியுள்ளனர். ஊரிலுள்ள குடும்பப் பெண்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பது எமக்கு பொறுத்தமல்ல. இங்கு முரண்பட்டுக் கொண்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இரு தரப்பினர்களுக்களுக்கு  மத்தியிலும் உள்ளனர்.

இந்தச் சம்வம் நமக்கு பெரும் வேதளை தருகின்றது. இந்தச் சம்வத்தினால் நம்முடைய தொழில், வியாபாரம்  வேலை வெட்டி எல்லாம் வெறும் பாழாகிப் போயுள்ளன. நாம் எல்லோரும் கலிமா சொன்ன முஸ்லிம்கள் ஒவ்வொருரிடத்திலும் விட்டுக் கொடுப்பு புரிந்துணவு பரஸ்பரம் நல்லெண்ணங்கள் எல்லாம் இயல்பாகவே நம்மிடத்தில்  இருத்தல்; வேண்டும். இஸ்லாம  சிறந்த மார்க்கம். அதன் வழி பின்பற்றி நடந்தால் இவ்வாறான பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லலை எதையும் பொறுமையுடன் ஆராயந்து பார்த்து செயற்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பொறுமைமிக்க முஸ்லிம் சமூகமாக வாழ வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

கொக்குரெல்லப் பொலிஸார் இது குறித்து பெரிய கவனம் செலுத்தா விட்டாலும் குருநாகல் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நமது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். அத்துடன் அயல் கிராம மக்கள் நமது விடயத்தில் கூடுதல் வகனம் கொண்டு நம்முடைய ஒற்றுமை முயற்சிகளுக்கு ஆர்வம் காட்டி  இரு தரப்பினடையே ஆலோசனைகளையும் நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இது போல் நம்மத்தியில் எழும் கருத்து முரண்பாடுகளை பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள் இவ்வாறு நடந்த கொள்வது நடந்து கொள்வது நமக்கு அழகல்ல எனச் சுட்டிக் அங்கு அவர் மேலும் குறிப்பிட்டர்.

இந்தக் கருத்துரைக்குப் பிற்பாடு  இரு தரப்பினரும் சாலம் கொடுத்துப் பேசிக் கொண்டனர்.

1 comment:

  1. சகோதர் அப்டுல் சத்தார் யின் இம் முயற்சி பாராட்டப்பட வேண்டியதே. அத்துடன் குருனாகல் DIG இன் ஒத்துழைப்பயும் பாராட்டாமல் இருந்து விட முடியாது. இப்பிரச்சினையை இவ்வலவு தூரம் கொண்டு செல்லாமல் முளையிலேயே கிள்ளி இருக்களாம். அதை செய்யாமல் அலற்சியமாய் வேடிக்கை பார்த்த நம் XXX க்கள்(யாரென்டு சொன்னால் இந்தபதிவு அகற்றப்பட்டுவிடலாம்) நிச்சயம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் எப்படி பதில் சொல்வார்களோ?
    தொடர்ந்தும் சுமுகமான உறவுக்கு அல்லாஹ்வை பிரார்திக்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.