மரண தண்டனையை ரத்துச்செய்ய 18 கோடி ரூபாய்..!
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளியின், மரண தண்டனையை ரத்து செய்ய, 18 கோடி ரூபாய் அளிக்கும் படி, சவுதி அரேபிய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்லிட்டோ சபன்டா. சூடான் நாட்டைச் சேர்ந்த நிலசுவான்தாரரை, 2009ம் ஆண்டில், தகராறின் போது, கொன்று விட்டார். சபன்டாவின் தலையைத் துண்டித்து, மரண தண்டனை நிறைவேற்றும் படி, கோர்ட் தீர்ப்பு கூறியது.
பிலிப்பைன்ஸ் அதிபர், பெனிக்னோ அகினோவின் வேண்டுகோளின் படி, சவுதி அரசு, சபன்டாவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. கொலையானவரின் குடும்பத்தாருக்கு, 18 கோடி ரூபாய் அளிக்க வேண்டும், என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது; நான்கு மாத காலம், சவுதி அரசு அவகாசம் அளித்துள்ளது.
Post a Comment